Connect with us

india

ஐசிசி சேர்மனாகிறாரா ஜெய் ஷா… சிக்கலுக்குத் தீர்வு காணுமா கொழும்பு மீட்டிங்?!

Published

on

ஜெய் ஷா

கொழும்புவில் தொடங்கும் ஐசிசி வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த சேர்மனாக இந்தியாவின் ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இலங்கையின் கொழும்புவில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்க இருக்கிறது. தற்போதைய சேர்மனான நியூஸிலாந்தின் கிரேக் பார்க்ளேவுக்குப் பின் அடுத்த சேர்மனாக யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளராக இருக்கும் ஜெய் ஷா, ஐசிசியின் அடுத்த சேர்மனாகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் சேர்மன் தேர்வு உள்பட 9 விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

குறிப்பாக சமீபத்தில் நடந்துமுடிந்த டி20 உலகக் கோப்பை தொடர் குறித்தும், அந்தத் தொடரில் ஐசிசிக்கு ஏற்பட்டுள்ள 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல், ஐசிசியின் நிதி கணக்கு வழக்குகளை ஆய்வு செய்யும் தன்னிச்சையான ஆடிட்டர் நியமனம் குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஐசிசியின் சேர்மனாக தற்போது இருக்கும் பார்க்ளே, சேர்மன் பதவிக்குப் போட்டியிட முடியாது. ஐசிசி விதிகளின்படி சேர்மனின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். அவர் மொத்தமாக 3 முறை அதாவது 6 ஆண்டுகள் மட்டுமே அந்தப் பதவியில் இருக்க முடியும். இந்த விதியை இரண்டு முறை மூன்றாண்டுகள் என்று மாற்ற இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதனால், பார்க்ளேவின் பதவிக்காலம் 2025ல் முடிவடையும். அதையடுத்து, பிசிசிஐ நிர்வாகியாக 6 ஆண்டுகளை நிறைவு செய்யும் ஜெய் ஷா, அடுத்த சேர்மனாகலாம். சேர்மன் பதவி 2026ல் நிறைவடையும்போது அவர் பிசிசிஐ தலைவராகவும் பொறுப்பேற்கலாம் என்கிறார்கள்.

google news