Connect with us

latest news

தூத்துக்குடி தனியார் ஆலையில் அம்மோனியா வாயுகசிவு- 21 பேர் மயக்கம்!

Published

on

தூத்துக்குடி தனியார் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவால் 21 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான மீன் பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் தமிழ்நாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஷிஃப்ட் முறையில் பணியாற்றி வருகிறார்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மீன்கள் இங்கு பதப்படுத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆலையில் நேற்றிரவு 11 மணியளவில் அம்மோனியா சிலிண்டரில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அம்மோனியா வாயு ஆலை முழுவதும் பரவிய நிலையில், அதை சுவாசித்த பெண்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 15 பெண்கள் உள்பட 21 பேர் கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்திருக்கிறார்கள்.

இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்கப்பட்ட அந்தப் பெண்கள் அனைவரும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி புதியம்புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *