india
வருமான வரி விதிப்பில் நடந்த திடீர் மாற்றம்… என்ன சொல்கிறார் நிதியமைச்சர்…
மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி குறித்து அறிவித்துள்ள முக்கிய தகவல்களின் தொகுப்பு.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மத்திய பட்ஜெட் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட்டது. வரி குறைப்பு, இளைஞர்களின் வேலை, பெண் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் பெரிய அளவிலான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
இருந்தும் பட்ஜெட் அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு தனிப்பட்டு எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருப்பதும் விமர்சனங்களையே உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில் வருமான வரி குறித்து வெளியாகி இருக்கும் அறிவிப்புகளில் நிலையான கழிவு 50,000 இருந்து 75 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி அறிவிப்பில் மூன்று லட்சம் வரை வருமானம் ஈட்டுவதற்கு எந்தவித வரி விதிப்பும் இல்லை. மூன்று லட்சம் முதல் 7 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவருக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும். அதுப்போல, ஏழு லட்சம் முதல் பத்து லட்சம் வரை வருமானம் ஈட்டுபவருக்கு 10% வரி விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானமாக 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை ஈட்டுபவருக்கு 15 சதவீதம் வரியாக செலுத்த வேண்டும். அடுத்ததாக, ஆண்டு வருமானமாக 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 15 லட்சத்துக்கு மேல் இருந்தால் 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாமல் இருக்கும் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்த ஏஞ்சல் வரி விதிப்பு தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.