Connect with us

Finance

பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்…ஆட்சியை காப்பற்றும் அறிவிப்பே இது…கண்டனத்தை குவிக்கும் தலைவர்கள்…

Published

on

Rahul Gandhi

மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் ஆட்சியமைத்துள்ளது. 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அருதிப்பெரும்பான்மையை பெற்று எந்த சிரமும் இன்றி ஆட்சி அரியனையில் ஏறி அமர்ந்தது அக்கட்சி. இந்தியாவை ஆளும் பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார் மோடி.ஆனால் இரண்டாயிரத்து இருபத்தி நான்காம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் மாபெரும் எழுச்சியை பெற்றது கடந்த 2019ம் ஆண்டு தேர்தலை விட.

இந்த முறை கூட்டணிக்கட்சிகள் ஏக மனதாக ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியதால் ஆட்சி அமைப்பது எளிதானது. அவையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அதிகம் பெற்றதால் அவையில் கூச்சல், குழப்பம், வெளிநடப்பு போன்ற சம்பவங்களும் அதிகமானது. மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ள மோடி தலைமையிலான பாஜக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

Mallika arjuna khargae

Mallika arjuna kharge

இந்த பட்ஜெட் குறித்த விமர்சனங்களை எதிர்கட்சியான காங்கிரஸ் மட்டும் அதன் கூட்டணி கட்சிகளும் தெரிவித்தும் வருகிறது. எதிர்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டினை கடுமையாக விமர்சித்துள்ளார். நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த பட்ஜெட்.

கூட்டணி கட்சிகளையும், அம்பானி, அதானியையும் திருப்தி படுத்துபவையே இந்த பட்ஜெட்டில் இருக்கிறது. சாமானியர்களுக்கு இந்த பட்ஜெட்டால் எந்த பிரயோஜனமும் கிடையாது என தனது விமர்சன அறிக்கையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதே போல காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகா அர்ஜுன கார்கே இது மோடி அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்டே தவிர வேறு ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *