Connect with us

Cricket

ஐபிஎல்லில் அடுத்தடுத்த நடக்க இருக்கும் சுவாரஸ்யம்… மாற இருக்கும் முக்கிய கேப்டன்கள்…

Published

on

ஐபிஎல் 2025 முதல் கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்க இருக்கும் நிலையில் முக்கிய ஐந்து அணிகளுக்கான கேப்டன்கள் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாக்கியிருக்கிறது. இந்த வருடம் மெகா ஏலம் என்பதால் பெரிய அளவிலான மாற்றங்கள் அணிக்குள் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். இது அந்த அணிக்கு பெரிய அளவில் விமர்சனத்தை கொண்டு வந்தது. ஐந்து கோப்பைகளை வாங்கி கொடுத்த ரோகித் சர்மா புறக்கணிக்கப்பட்டதும், இம்பாக்ட் ப்ளேயராக உள்ளே இறக்கப்பட்டதும் பெரிய அளவில் பேசுபொருளானது.

ஒவ்வொரு அணியும் மெகா இடத்திற்கு முன் மூன்று நபரை மட்டுமே தக்கவைக்க முடியும. அந்த வகையில் மும்பை அணி சிறப்பான ஃபார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ், பும்ரா, ஹர்திக் பாண்டியா தக்கவைக்க முடியும். இதனால் ரோகித் சர்மா மெகா ஏலத்திற்குள் வர வாய்ப்பு இருக்கிறது.

இதனால் அவரை தங்கள் அடுக்கி எடுக்க பெரிய அளவிலான போட்டி இருக்கும். டெல்லி, குஜராத், லக்னோ, பெங்களூரு, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் ரோகித் சர்மாவை தங்கள் அணிக்குள் எடுக்க தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. கடந்த சீசனில் லக்னோ அணி கேப்டன் கே எல் ராகுலை பொதுவெளியில் வைத்து அதன் ஓனர் விமர்சனம் செய்ததால் அவர் இந்த வருடம் வேற அணிக்கு தாவவும் வாய்ப்பு இருக்கிறது.

அதுபோல, பெங்களூர் அணியின் கேப்டனான டூப்ளசி சரியான ஃபார்மல் இல்லாததால் அந்த அணியில் கேப்டன் மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஐந்து அணிகளில் ஒன்று ரோகித்தை எடுத்து தங்கள் அணிக்கு கேப்டனாக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ஏனெனில் இதில் குஜராத் அணியை தவிர மற்ற நான்கு அடிகளும் இதுவரை ஒரு முறை கூட கப்பலை அடிக்கவில்லை. மும்பை அணிக்காக ஐந்து முறை கப் வாங்கி கொடுத்த ரோகித்தை தங்கள் அணிக்குள் எடுப்பது அந்த அணிக்கு பெரிய அளவில் பலமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மெகா இடத்தில் பெரிய அளவிலான மாற்றங்களை ஐபிஎல் ரசிகர்கள் காணலாம் எனவும் கூறப்படுகிறது.

google news