Connect with us

Cricket

டிராவிட் இப்படித்தான்.. பவுலிங் கோச் சொல்வது என்ன?

Published

on

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்று இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணி முற்றிலும் புதிய பயணத்தை தொடங்குகிறது. இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்த பயணம் இனிதே துவங்க உள்ளது.

இதற்காக தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இலங்கை புறப்பட்டு சென்றுள்ளது. கடந்த மாதத்துடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவிக்காலம் நிறைவுக்கு வந்தது. இவரைத் தொடர்ந்து தான் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பதவியேற்றுள்ளார்.

ராகுல் டிராவிட் உடன் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோரும் அணியில் இருந்து விலகியுள்ளனர். எனினும், ஃபீல்டிங் பயிற்சியாளரான திலீப்-ஐ மட்டும் பிசிசிஐ தக்கவைத்துக் கொண்டுள்ளது. இலங்கை சுற்றுப் பயணத்திற்காக மட்டும் அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஷேட் அணியின் உதவியாளர் குழுவில் இணைந்துள்ளனர்.

இந்தியா ஏ, அண்டர் 19 மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி என பல ஆண்டுகாலம் ராகுல் டிராவிட் உடன் பணியாற்றியவர் மாம்ப்ரே. அந்த வகையில், தற்போது பயிற்சியாளர் குழுவில் இருந்து ஓய்வு பெறும் மாம்ப்ரே ராகுல் டிராவிட் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

நான் ராகுலுடன் நீண்ட காலம் பணியாற்றி இருக்கிறேன். இந்தியா ஏ, அண்டர் 19, தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் இந்திய அணி என பலக்கட்டங்களில் அவருடன் பயணித்துள்ளேன். இத்தனை ஆண்டுகளில் ராகுல் டிராவிட் என்ன எதிர்பார்ப்பார் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். அவர் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொண்டதில்லை. அவர் அணியை முன்னிறுத்துபவர்.

வீரர்கள் மீது அதிக கவனம் செலுத்துவார். எப்போதும் வீரர்கள் பற்றியே கவனம் கொள்வார். தனக்கு நற்பெயர் கிடைக்க வேண்டும் என்று அவர் எதையும் எப்போதும் செய்ததில்லை. போட்டியில் அவர் லெஜண்ட். நான் பின்னணியில் செயல்படுவேன். கேப்டன் மற்றும் அணியினர் முன்னிலையில் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம் என கருதுபவர் ராகுல் என்று மாம்ப்ரே தெரிவித்தார்.

google news