Connect with us

india

விளையாட்டா போச்சா?…ஓவரா ஓரவஞ்சனை காட்டும் பாஜக…கொதித்தெழுந்த உதயநிதி…

Published

on

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் இந்தியாவைஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் மீது தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அன்மையில் நாடாளுமன்றத்தில் நடப்பாண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்திருந்தார். இதில் பாஜக ஆட்சியமைக்க அதிகமாக உதவிய சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர மாநிலத்திற்கும், நிதிஷ் குமாரின் பிகாருக்கும் அதிகமான நிதியும், திட்டங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்காள் எழுந்தது.

இந்நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறைக்கு என ஒன்றிய அரசு தமிழகத்திற்கு இருபது கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கி பாரபட்சம் காட்டியிருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கேலோ இந்திய திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா வெளியிட்டுள்ள புள்ளி விவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் ஒன்றிய பாஜக அரசு என்பதற்கான சான்றாக உள்ளது என்றுள்ளார்.

Mansukh Mandaviya

Mansukh Mandaviya

கடந்த ஏழு ஆண்டுகளில், பாஜக ஆளும் உத்திரபிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கு தலா நானூறு கோடிக்கு மேல் வழங்கி தாராளம் காட்டியிருக்கும் பாஜக, தமிழ் நாட்டிற்கு வெறும் இருபது கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பல சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் தமிழ் நாட்டில் நடத்தப்பட்டுள்ளது, சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டுத்துறையில் முகமாக தமிழ் நாடு மாறி வருகிறது.

விளையாட்டுத் துறையில் இத்தனை ஆக்கப்பூர்வமாக செயல்படும் தமிழ் நாட்டுக்கு வெறும் இருபது கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கியிருப்பதை நம் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள், இது தமிழ் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என தனது கண்டனத்தினை அழுத்தமாகத் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

google news