Connect with us

latest news

பாரிஸ் ஒலிம்பிக்2024: இந்திய அணி ஜூலை29ல் பங்கேற்கும் போட்டிகள்… இத்தனை பதக்கத்துக்கு வாய்ப்பா?

Published

on

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஜூலை 29ஆம் தேதி இந்திய அணி பங்கெடுக்கும் போட்டிகள் குறித்த முக்கிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

12:00 மணிக்கு பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி எதிராக ஜெர்மனியை சேர்ந்த மார்க் லாம்ஸ்ஃபஸ் மற்றும் மார்வின் சீடல் போட்டியிடுகின்றனர்.

12:45 மணிக்கு 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ரிதம் சங்வான் மற்றும் அர்ஜுன் சிங் சீமா ஆகியோர் இரண்டு அணியாக போட்டியிடுகின்றனர். 12.50க்கு பேட்மிண்டன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் தனிஷா க்ராஸ்டோ, அஷ்வினி பொன்னப்பா எதிராக ஜப்பான் நாட்டை சேர்ந்த நமி மாட்சுயாமா, சிஹாரு ஷிதா போட்டியிடுகின்றனர்.

13:00 துப்பாக்கி சுடுதல் ஆண்கள் தகுதி போட்டியில் பிருத்விராஜ் தொண்டைமான், 13:00 மணிக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி 10 மீ ஏர் ரைபிள் மகளிர் இறுதிப் போட்டியில் ரமிதா ஜிண்டால் போட்டியிடுகின்றனர். 15:30 மணிக்கு துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் ஆடவர் இறுதிப் போட்டியில் அர்ஜுன் பாபுதா விளையாடுகின்றனர். 16:15 மணிக்கு ஹாக்கி போட்டி ஆண்கள் பூல் B இந்தியாவை அர்ஜென்டினா எதிர்கொள்கிறது.

17:30க்கு பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் லக்ஷ்யா சென்னை ஜெர்மனியின் ஜூலியன் கராக்கி எதிர்கொள்கிறார். 18:31 மணிக்கு வில்வித்தை போட்டியில் ஆண்கள் அணி காலிறுதி பிரிவில் திரஜ் பொம்மதேவரா, பிரவின் ஜாதவ், தருந்தீப் ராய் போட்டியிடுகின்றனர். 20:18 மணிக்கு வில்வித்தை போட்டியில் ஆண்கள் அணி வெண்கலப் பதக்கப் பிரிவில் திராஜ் பொம்மதேவரா, பிரவின் ஜாதவ், தருந்தீப் ராய் போட்டியிடுகின்றனர்.

23:30 மணிக்கு டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் சுற்று ஸ்ரீஜா அகுலாவை சிங்கப்பூர் ஜியான் ஜெங் எதிர்கொள்கிறார். ஏற்கனவே ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவை சேர்ந்த மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று இருக்கிறார். இன்னும் மேலும் சில பதக்கங்கள் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *