automobile
கார்களுக்கு வேற லெவல் சலுகைகள் அறிவித்த ஹூண்டாய் – உடனே வாங்கிடலாம் போலயே!
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் ஜூன் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. இவை தள்ளுபடி, கார்ப்பரேட் சலுகை மற்றும் எக்சேன்ஜ் சலுகைகள் வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த முறை ஹூண்டாய் நிறுவனத்தின் கிரான்ட் i10 நியோஸ், ஆரா, i20, அல்கசார் மற்றும் கோனா EV போன்ற மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஜூன் மாதத்திற்கு இந்திய சந்தையில் ஹூண்டாய் வழங்கி வரும் சலுகை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூன்டாய் கோனா EV :
இந்திய சந்தையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா மாடல் எம்ஜி ZS EV மற்றும் பி.ஒய்.டி. அட்டோ 3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த காரில் 39.2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 136 ஹெச்பி பவர், 395 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த காரை 50 கிலோவாட் டிசி சார்ஜர் மூலம் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 57 நிமிடங்களே ஆகும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்றும் ARAI சான்று பெற்று இருக்கிறது.
ஹூண்டாய் கிரான்ட் i10 நியோஸ் :
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரான்ட் i10 நியோஸ் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் சலுகைகள் என மொத்தம் ரூ. 38 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த பலன்கள் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யூடிவ் மேனுவல் வேரியண்டிற்கு மட்டுமே பொருந்தும்.
கிரான்ட் i10 நியோஸ் CNG வேரியண்ட்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. AMT வேரியண்ட்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை. இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரான்ட் i10 நியோஸ் மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 73 ஆயிரம் என்று துவங்கி, டாப் என்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 51 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹூண்டாய் ஆரா :
ஹூண்டாய் ஆரா மாடலின் CNG வேரியண்ட்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, ரூ. 10 ஆயிரத்திற்கு எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான கார்ப்பரேட் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆரா பெட்ரோல் வேரியண்ட் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கிரான்ட் i10 நியோஸ் மாடலின் காம்பேக்ட் செடான் வேரியண்டாக ஆரா மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் i20 :
ஹூண்டாய் i20 மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் i20 மாடல் மாருதி சுசுகி பலேனோ, டாடா அல்ட்ரோஸ் மற்றும் டொயோட்டா கிளான்சா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஹூண்டாய் அலகசார் :
இந்திய சந்தையில் ஹூண்டாய் அல்கசார் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலுக்கு தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ஹூண்டாய் அல்கசார் மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த மாடல் டாடா சஃபாரி மற்றும் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.