automobile
இவ்வளவு ஆஃபர்களா? மாருதி கார் வாங்க இது தான் நல்ல Chance.. மிஸ் பன்னிடாதீங்க..!
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஜூலை மாதத்துக்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட நெக்சா பிரான்டு மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவை எக்சேன்ஜ் ஆஃபர், ரொக்க வடிவில் தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன.
இந்த பலன்கள் அனைத்தும் மாருதி சுசுகி இக்னிஸ், சியாஸ் மற்றும் பலேனோ மாடல்களுக்கு மட்டும் பொருந்தும். எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு சலுகை வழங்கப்படும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி இக்னிஸ் | ரூ. 64 ஆயிரம் வரையிலான பலன்கள் :
2017 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி இக்னிஸ் மாடல் இன்று வரை நெக்சா பிரான்டின் என்ட்ரி-லெவல் மாடலாக உள்ளது. தற்போது இந்த காரை வாங்குவோர் ரூ. 64 ஆயிரம் வரையிலான சேமிப்புகளை பெற முடியும். இது மேனுவல் வேரியன்ட்களுக்கான சலுகை ஆகும்.
ஆட்டோமேடிக் வேரியண்ட் வாங்குவோர் ரூ. 54 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இதில் ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் சலுகை அடங்கும். இந்திய சந்தையில் மாருதி சுசுகி இக்னிஸ் மாடல் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிரான்ட் i10 நியோஸ் மற்று்ம டாடா டியாகோ மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மாருதி சுசுகி சியாஸ் | ரூ. 38 ஆயிரம் வரையிலான பலன்கள் :
நெக்சா பிரான்டிங்கில் பழைய மாடல்களில் ஒன்றாக மாருதி சுசுகி சியாஸ் இருக்கிறது. இந்த செடான் காருக்கு ரூ. 38 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இது சியாஸ் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வேரியன்ட்களுக்கு பொருந்தும். இதில் ரூ. 10 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை, ரூ. 3 ஆயிரம் வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் மாருதி சுசுகி சியாஸ் மாடல் ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லேவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. மாருதி சியாஸ் மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 30 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 29 ஆயிரம் ஆகும்.
மாருதி சுசுகி பலேனோ | ரூ. 20 ஆயிரம் வரையிலான பலன்கள் :
மாருதி நெக்சா விற்பனையாளர்கள் பலேனோ மாடலின் பெட்ரோல் மேனுவல் மற்றும் CNG வேரியண்ட்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கி வருகின்றனர். ஆட்டோமேடிக் வேரியன்டிற்கு ரூ. 17 ஆயிரத்து 500 வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. பல மாதங்களுக்கு பிறகு தற்போது தான் CNG வேரியண்ட்-க்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பிரீமியம் ஹேச்பேக் மாடலான பலேனோ 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 90 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. CNG மோடில், இந்த என்ஜின் 77.5 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது.