Connect with us

Cricket

யாரும் எதிர்பார்க்கல.. எத்தன twist, BCCI-னா சும்மாவா?

Published

on

இந்தியாவில் மிகமுக்கிய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று துலீப் கோப்பை போட்டி. இந்திய கிரிக்கெட் அணிக்கு கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளர் ஆனதில் இருந்து, அணியில் ஏற்படும் அதிரடி மாற்றங்களுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். இதே போக்கு, துலீப் கோப்பை தொடருக்கும் எழுந்தது.

கடந்த வாரம் துவங்கி துலீப் கோப்பையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் குறித்து ஏராளமான தகவல்கள் வெளியாகின. அதில் மிகமுக்கியமான ஒன்றாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் துலீப் கோப்பையில் விளையாடுவார்கள் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இந்திய கேப்டன் மற்றும் அணியில் மூத்த, நட்சத்திர வீரர்கள் இருவரும் துலீப் கோப்பையில் விளையாடுவார்கள் என்ற தகவல் அனைவரையும் “ஏன்?” சொல்ல வைத்தது.

இந்த நிலையில், 2024-25 ஆண்டுக்கான துலீப் கோப்பை தொடரின் முதற்கட்ட போட்டிகளின் அணி விவரங்களை பிசிசிஐ அறிவித்து இருக்கிறது. இந்த தொடர் செபம்டபர் 5 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த முறை துலீப் கோப்பை தொடர் ஆந்திர பிரேதச மாநிலம், அனந்தபூர் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கிறது. துலீப் கோப்பை தொடர் மூலம் இந்திய தேசிய அணிக்கான வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

பிசிசிஐ வெளியிட்ட புதிய அறிவிக்கையின் படி, துலீப் கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகிச் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் இடம்பெறவில்லை. இதேபோன்று ரிங்கு சிங்கும் எந்த அணியிலும் இடம்பெறவில்லை.

இந்த முறை நான்கு அணிகள் மோதும் துலீப் கோப்பை தொடரில் சுப்மன் கில், அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு..

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர்களில் ரியான் பராக், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன், அக்சர் பட்டேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாட உள்ளனர். துலீப் கோப்பை தொடரில் வீரர்களின் செயல்பாட்டை பொருத்து அவர்கள் தேசிய அணியில் இடம்பிடிக்க முடியும்.

google news

Cricket

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

Published

on

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. சிவப்பு பந்துடன் ஹர்திக் பயிற்சியில் ஈடுபட்டதை பார்த்து பலரும், அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று கூறினர். பலரும் இவரது டெஸ்ட் கம்பேக் விரைவில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

முன்னதாக ஐபிஎல் 2022 ஆண்டு காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். முழு கவனத்தையும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா செலுத்தி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட ஹர்திக் பாண்டியா சேர்க்கப்படவில்லை. இதற்கும் கூட அவர் உள்ளூர் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடினால், தேசிய அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டது ஏன் என்ற கேள்விக்கு விக்கெட் கீப்பர், பேட்டர் பார்த்திவ் பட்டேல் பதில் அளித்துள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமான போது ஜியோசினிமாவில் பேசிய பார்த்திவ் பட்டேல், ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக சிவப்பு பந்து கொண்டு பயிற்சி செய்ய சொன்னார்கள் என்று கூறியுள்ளார்.

“ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. வெள்ளை பந்து கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் தான் அவர் சிவப்பு பந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். என்னை பொருத்தவரை அவரது உடல், நான்கு அல்லது ஐந்து நாள் போட்டிகளுக்கு ஒத்துழைக்கும் என்று நினைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட அவர் ஒற்றை முதல்-தர போட்டியிலாவது விளையாட வேண்டும், இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்,” என்றார்.

google news
Continue Reading

Cricket

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

Published

on

Rain-Play

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி தொடர்களில் விளையாட வந்துள்ள வங்கதேச அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதாபமாக தோற்றது. முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்தது.

துவக்கத்தில் இந்திய வீரர்களை அசைத்துப் பார்த்த பங்களாதேஷ் அணியை ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை தங்களது அபாரமான பேட்டிங் மற்றும் பந்து வீச்சினால் திணறடித்தனர். போட்டி நடக்க வேண்டிய ஐந்து நாட்களுக்குள்ளாகவே இரண்டு இன்னிங்ஸ்களும் முடிவடைந்து பங்களாதேஷ் பரிதாபமாக தனது வெற்றியை இந்திய அணியிடம் பறிகொடுத்தது.

இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று துவங்கியது.

Kanpur

Kanpur

டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேசத்தை பேட்டிங் செய்ய அழைத்தது. முப்பத்தி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்றைய ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மூன்று விக்கெட்டுகளை இழந்து நூற்றி ஏழு ரன்களை எடுத்திருந்தது வங்கதேச அணி முப்பத்தி ஐந்து ஓவர்கள் நிறைவடைந்திருந்த நிலையில்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தங்கு தடை ஏதுமின்றி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பந்து கூட வீசப்படாமல் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. பலத்த மழையின் காரணமாக இன்றைய ஆட்டம் நடைபெறாமல் போனாலும் நாளை முழுமையாக போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர் இரு நாட்டு அணி ரசிகர்களும்.

google news
Continue Reading

Cricket

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

Published

on

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி கடந்த வாரம் சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்ததோடு, இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இரு அணிகள் இடையிலான முதலாவது போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கான்பூரில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்திய வீர்ர்களான விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை அழைத்து நிற்க வைத்து, அவர் முன் அவரது பந்துவீச்சை செய்து காட்டிய சம்பவம் அரங்கேறியது.

கான்பூரில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆட்டம் துவங்கும் முன்பே, இந்த சேட்டை சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அப்போது விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா பும்ராவின் முன் அவரது பந்துவீச்சு ஆக்ஷன் எப்படி இருக்கும் என்பதை செய்து காட்டினர். இதனை துவக்கத்தில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்த இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் வாய்விட்டு சிரித்தார்.

களத்தில் போட்டி துவங்கும் முன் இரு வீரர்கள் பும்ராவை கலாய்க்கும் சம்பவத்தை பார்த்து சிரித்த ரியான், ஒருக்கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் தான் அணிந்திருந்த குளோவ் மூலம் முகத்தை மறைத்துக் கொண்டார்.

google news
Continue Reading

Cricket

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

Published

on

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து அசத்தியுள்ளார். 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனைக்கு ஜடேஜா சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000-க்கும் அதிக ரன்கள் மற்றும் 200-க்கும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது ஜடேஜா இந்த சாதனையை படைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜடேஜா இந்த சாதனையை படைத்துள்ள நிலையில், இதே சாதனையை மற்றொரு வீரர் சமன் செய்யும் நிலையில் உள்ளார்.

இந்த வீரரும் இந்திய அணியில் தற்போது விளையாடி வருபவர் தான். இந்திய அணியின் மற்றொரு ஆல்-ரவுண்டர் வீரராக சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஜடேஜாவின் இந்த சாதனையை நெருங்கி வருகிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் இதுவரை 1943 ரன்களையும், 369 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

ரவீந்திர ஜடேஜா தற்போது 299 விக்கெட்டுகள் மற்றும் 3122 ரன்களை அடித்துள்ள நிலையில், அவர் இன்னும் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைக்க முடியும்.

google news
Continue Reading

Cricket

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

Published

on

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த வாரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

இதன் தொடர்ச்சியாக இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி நிதானமாக ஆடியது.

முதல் நாள் உணவு இடைவேளை வரை அந்த அணி 74 ரன்களை மட்டுமே குவித்து இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இடையில் மழை காரணமாக போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. பிறகு உணவு இடைவெளிக்குப் பின் போட்டி மீண்டும் துவங்கியது. பிறகு மீண்டும் மழை குறுக்கிட்டதால், நேற்றைய ஆட்டம் பாதியில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் நாளில் வங்கதேசம் அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை அடித்திருந்தது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு துவங்க இருந்தது. எனினும், தொடர் மழை காரணமாக இன்றைய போட்டி ஆரம்பிக்கப்படாமல் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது. மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகும் களத்தில் போட்டியை நடத்த முடியாத சூழல் நிலவி வந்துள்ளது.

இதனால் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இன்றைய நாளில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி நிறுத்தப்பட்டு இருப்பது ரசிகர்கள் மற்றும் இரு அணி வீரர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

google news
Continue Reading

Trending