எல்லாம் ஓரளவுக்கு தாங்க… விராட் கோலி ஓய்வுக்கு காரணமே இதுதான்… போட்டு உடைத்த இங்கிலாந்து வீரர்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி கடந்த மாதம் அறிவித்தார். இவரது ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவப்பு பந்து கிரிக்கெட்டில் மிகவும் ஆக்ரோஷமான வீரர் என்று அறியப்பட்ட விராட் கோலி பல சமயங்களில் இந்திய அணி வெற்றிக்கு தேவையான இன்னிங்ஸில் விளையாடி இருக்கிறார்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி உச்சம் படைக்க செய்ததில் விராட் கோலியின் பங்கு மிகவும் பெரியது. அணியை வழிநடத்திய காலக்கட்டத்திலும், கேப்டன்சியில் இருந்து விலகிய பிறகும் களத்தில் இவரது தாக்கம் எப்போதும் சரிந்ததே இல்லை என்று கூறும் அளவுக்கு செயல்பட்டவர் விராட் கோலி. பல்வேறு சாதனைகள் மற்றும் அசத்தலான இன்னிங்ஸில் விளையாடிய போதிலும், கடந்த 2024/25 சீசனில் இவரது ஃபார்ம் பற்றி ஏராளமான கேள்விகள் எழுந்தன.

கடைசியாக விளையாடிய பத்து டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்காத நிலையில், இவரது காலம் முடிந்துவிட்டதாகவே கூறப்பட்டது. ஃபார்ம் மோசமாக இருந்த போதிலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி நிச்சயம் மீண்டு எழுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ஓய்வு அறிவிக்க இதுதான் காரணம் என்று பலரும் பலவித கருத்துக்களை முன்வைத்தனர். இந்த வரிசையில், இங்கிலாந்து அணியின் ஜெஃப்ரி பாய்காட் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ஓய்வு பெற செய்ததற்கு புதிய காரணத்தை கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இந்திய அணி அதிகப்படியான சர்வதேச கிரிக்கெட் விளையாடி இருக்கும் சூழ்நிலையில், ஓய்வு காலம் என்பது மிகவும் குறையும். இதற்கான பலன் தேவையான ஓய்வு இல்லாத சூழலில் மனம் மங்கிவிடும். எத்தனை திறமை அல்லது அனுபவம் இருந்தாலும், மனதளவில் புத்துணர்ச்சி இல்லையெனில் உங்களால் போட்டியை ஏற்படுத்தும் அளவுக்கு செயல்பட முடியாது. திறமை கூட வெளிப்பட முடியாத வகையில் காலியாகிவிடும், என்று கூறினார்.

Leave a Comment