Connect with us

Cricket

ஐசிசி-யின் டி20 ஆல்ரவுண்டர் பட்டியல்: ஜடேஜாவை பின்தள்ளிய விராட் கோலி

Published

on

டி20 உலகக் கோப்பை 2024 தொடருடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா அறிவித்தனர். இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதும், இருவரும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இந்த நிலையில், ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்கள் பட்டியில் வெளியாகி உள்ளது.

இந்த பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜாவை பின்தள்ளி அசத்தியுள்ளார். ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் விராட் கோலி 6 இடங்கள் முன்னேறி 79 ஆவது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 9 இடங்கள் முன்னேறி 86 ஆவது இடத்தில் உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி ஒருபந்துகூட வீசவில்லை. பேட்டிங்கிலும் இவர் 151 ரன்களை மட்டுமே குவித்தார். இதேபோன்று ரவீந்திர ஜடேஜாவும் பேட்டிங்கில் 35 ரன்கள், பந்துவீச்சில் 1 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார்.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக விராட் கோலி அதிகம் பந்துவீசவில்லை. மறுபுறம் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் ஆல் ரவுண்டராகவே விளையாடி வந்துள்ளார். அதிரடி பேட்டர் ஆன விராட் கோலி ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவை பின்தள்ளி முன்னேற்றம் கண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

டி20 போட்டிகளை பொருத்தவரை விராட் கோலி 4 விக்கெட்டுகளையே வீழ்த்தியுள்ளார். மறுபுறம் ரவீந்திர ஜடேஜா 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் இந்த விவரங்கள் அப்படியே இருவருக்கும் தலைகீழாகவே இருக்கும்.

google news