பதவியை ஏற்றால்.. அவருக்கும், அணிக்கும் வாழ்த்துகள் – கபில் தேவ்

0
124

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கவுன்சில் பிசிசிஐ கடந்த வாரம் வெளியிட்டது. ராகுல் டிராவிட்-ஐ தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றுள்ள கவுதம் காம்பீர், அடுத்த வாரம் துவங்கும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பணியை துவங்க உள்ளார்.

ராகுல் டிராவிட் போன்று பயிற்சியாளர் பதவியில் கவுதம் காம்பீர் அனுபவம் மிக்கவர் இல்லை. மாறாக இவர் ஆலோசகர் பணியில் அனுபவம் மிக்கவர். உலகளவில் பிரபலமான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் மூன்று ஆண்டுகள் ஆலோசகராக பணியாற்றி உள்ளார். கவுதம் காம்பீர் இரண்டு ஆண்டுகள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தார்.

இவர் வழிகாட்டுதலில் அந்த அணி ஐபிஎல் 2022 மற்றும் ஐபிஎல் 2023 தொடர்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி ஆலோசகராக பணியாற்றிய கவுதம் காம்பீர், அந்த அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். ஆலோசகர் பணியில் கவுதம் காம்பீர் சிறந்து விளங்கிய நிலையில், அவர் தலைமை பயிற்சியாளார் பதவிக்கு ஏற்றவர்தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் “ஒருவேளை கவுதம் காம்பீர் இந்த பதவியை (இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர்) ஏற்றால், அவர் மற்றும் அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஏற்கனவே செய்ததைவிட அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். இந்திய வீரர்களுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here