Cricket
ரொம்ப பெருமையா இருக்கு! இந்தியாவுக்காக 500-வது போட்டி…விராட் கோலி நெகிழ்ச்சி.!!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சதம் விளாசி பல சாதனைகளை படைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் வெளிநாட்டுகளில் கிரிக்கெட் விளையாடும் போது சதம் அடிக்காததால் அவர் மீது பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது.
அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் விராட்கோலி பதிலடி கொடுத்துள்ளார் என்றே கூறலாம். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விராட் கோலி நான் வெளிநாட்டுகளில் 15 சதங்கள் அடித்து இருக்கிறேன் இது மிகவும் மோசமான சாதனை என்று நான் பார்க்கவில்லை. இப்படி என்னை பற்றி மோசமான சாதனைகள் என்று பேசுபவர்கள் வெளி ஆட்களாக இருக்கலாம் என நான் நினைக்கிறன்.
நான் இன்று நடைபெற்ற போட்டியில் சதம் விளாசியது போல் பல சாதனைகளை இந்திய அணிக்காக படைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த கடமை இன்னும் எனக்கு அதிகமாகவே இருக்கிறது. பொதுவாகவே நாம் விளையாடினோம் என்றால் அதில் ஒரு தாக்கத்தை நாம் ஏற்படுத்த வேண்டும் அப்போதுதான் அந்த தாக்கம் மிகவும் ஸ்பெஷல் ஆக இருக்கும்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நான் சதம் அடித்த இந்த தொடரில் நான் என் மிகவும் நிதானமாக விளையாடினேன் அதனை நினைத்து மிகவும் பெருமையாக உணர்கிறேன். இந்த போட்டி மிகவும் சுலபமாக இல்லை மிகவும் கடினமாக தான் இருந்தது ஒரு ரன்கள் அடிக்கும் பொழுதும் பந்து சரியாக பேட்டிற்கு வரவில்லை. இந்தியாவுக்காக நான் 500 -ஆவது போட்டி விளையாடுவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை ஆனால் தற்போது 500 வது போட்டியில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என விராட் கோலி தெரிவித்துள்ளார்.