இந்த தடவ மிஸ் ஆகாது… ஜெய்ஸ்வாலுக்கு புது பொறுப்பு… தீவிர பயிற்சியில் இந்திய அணி..!

இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் துவக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் நான்கு கேட்ச்களை தவறவிட்டது இந்திய அணி பின்னடைவுக்கும், தோல்விக்கும் காரணமாக அமைந்துவிட்டது. இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தவறை சரி செய்யும் வகையில் இந்திய அணி மாற்றம் செய்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஒட்டி இந்திய அணி வீரர்கள் பிர்மிங்காமில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் போது ஸ்லிப் பீல்டிங் செய்வதற்கான பயிற்சியில் சாய் சுதர்சன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, சுப்மன் கில் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஈடுபட்டனர். ஸ்லிப் பொறுப்பில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் நேற்றைய பயிற்சியில் ஸ்லிப் பீல்டிங் செய்வதற்கான பயிற்சியை எடுத்துக் கொள்ளவில்லை.

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ரியான் டென் டொசேட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக கேட்ச் பிடிக்கக்கூடியவர் என்றார். மேலும், கேட்ச்சிங் பிரிவில் ஆழமான செயல்பாடு இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைப்பேன். எங்களுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறந்த கேட்சராகவே இருந்துள்ளார். அவரின் நம்பிக்கையை சிறப்பாக கையாளும் சூழ்நிலையில் இருக்கிறோம்.

இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடும் போது ஷாட் லெக் மிகமுக்கிய பகுதி என்பது குறித்த விவாதம் எப்போதும் இருக்கும். இந்த பகுதியில் சிறப்பாக செயல்பட அதிக வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இதனால் பீல்டிங்கில் அதிக வீரர்கள் அதிக பணியாற்றுவது நல்லது என்பது தான் அனைவருக்கும் சிறப்பானதாக இருக்கும் என நினைக்கிறேன், என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இங்கிலாந்தில் எப்போதும் நான்கு கேட்சர்கள் இருப்பது அவசியம் ஆகும். யஷஸ்வி ஜெய்ஸ்வால் கல்லியில் பீல்டிங் செய்வதற்கு சிறிய ஓய்வு அளிக்கப்படுகிறது. அவரது கைகள் சற்றே தோதாக இல்லை. மேலும், அவரின் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என நினைக்கிறோம் என்று கூறினார்.

Leave a Comment