health tips
பாகற்காயின் கசப்பு சுவை … ஆரோக்கிய வாழ்வுக்கு இனிப்பு சுவை!
”கசப்பு தான் எனக்குப் பிடிச்ச டேஸ்ட்… இது உடலுக்கும் குடலுக்கும் ரொம்ப ரொம்ப நல்லது” ன்னு நாம பாட்டே பாடிவிடலாம்.
பாகற்காய் என்றாலே நம் நினைவுக்கு டக்கென்று வருவது கசப்பு தான். ஆனால் இது தான் உடலுக்கு இனிமை தரும் பல அற்புத விஷயங்களைச் செய்கிறது. என்னன்னு பார்க்கலாமா…
பாகற்காயில் பீட்டா கரோட்டின் அதிகளவில் உள்ளது. சாப்பிடும்போது இது வைட்டமின் ஏவாக மாறி உடலுக்குள் சேர்கிறது. தோல் மற்றும் கண்ணுக்கு மிகவும் நல்லது.
கால்சியம் சத்தும் அதிகளவில் உள்ளதால் நம் எலும்பு, பற்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது.
பொட்டாசியமும் அதிகளவில் இருப்பதால் தசையின் வலிமையை அதிகரிக்கிறது. நரம்பு மண்டலம் மற்றும் இதய சம்பந்தமான வியாதிகளுக்கு அருமருந்தாக உள்ளது.
பாகற்காயில் இன்சுலின் சாரண்டின் என்ற வேதிப்பொருள் உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் சுரப்பதை ஊக்குவிக்கும்.
கலோரி குறைந்த ஓர் உணவு. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, சி, மக்னீசியம், போலேட், சிங்க், பாஸ்பரஸ், நார்ச்சத்து, மாங்கனீசு என பல ஊட்டச்சத்துகள் உள்ளன.
இரப்பை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு அருமருந்தாக உள்ளது. பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் குடற்புழுக்கள் நீங்கி விடும். அதே போல உடலில் அலர்ஜி மற்றும் வீக்கம், கட்டிகளையும் போக்கும் சக்தி இந்த பாகற்காய் ஜூஸ்க்கு உண்டு.
அது மட்டுமல்லாமல், தலைமுடியைப் பாதுகாக்கும். உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதைத் தடுத்து உடல் எடையைக் குறைக்கும். சுவாசப்பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும். கல்லீரல் நோய்களைத் தீர்க்கும். மலச்சிக்கலைப் போக்கும்.
எல்லாம் சரிதான். ஒண்ணு மட்டும் நாம கட்டாயமாக கவனிக்கணும். என்னன்னா கர்ப்பிணிப் பெண்கள் பாகற்காயைக் கட்டாயமாக உணவில் சேர்க்கக்கூடாது. இது குறைபிரசவத்திற்கு வழிவகுத்து விடும்.