job news
மாதம் ரூ.3.2 லட்சம் சம்பளம் வாங்க தயாரா..? சென்னை துறைமுகத்தில் வேலை..! மிஸ் பண்ணிடாதீங்க..
சென்னை துறைமுக ஆணையம் (Chennai Port Trust) எண்ணூர் காமராஜர் போர்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக இயக்குநர் (Managing Director) பதவிக்கு ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சென்னை துறைமுக ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள Notification அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
காமராஜர் போர்ட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் முழு நேர முக்கிய நிர்வாகப் பணியாளர் மற்றும் துறைமுகச் செயல்பாட்டின் அனைத்து அம்சங்களிலும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆக செயல்படுவார். அவர் நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் துறைமுகத்தின் பல்வேறு துறைகளின் செயல்பாட்டை மேற்பார்வையிட வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயது மற்றும் தகுதி:
எப்படி விண்ணப்பிப்பது.?
- நிர்வாக இயக்குநர் பதவியில் (Managing Director) சேர ஆர்வம் மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Application Form என்னும் ஆன்லைன் வசதி மூலம் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் செல்லவேண்டும்.
- அங்கு கேட்கப்பட்டிருக்கும் அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
- அல்லது Notification ல் உள்ள விண்ணப்பத்தை நிரப்பி செயலாளர், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், நூற்றாண்டு கட்டிடம் (8வது தளம்), எண்.1, ராஜாஜி சாலை, சென்னை-600 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- அல்லது [email protected] (OR) [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:
விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் தேவையான ஆவணங்களுடன் ஜூலை 3ம் தேதிக்குள் தபால்/மின்னஞ்சல் மூலம் மேற்குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடைவதை உறுதிசெய்யுமாறு மத்திய/மாநில அரசுகள் மற்றும் முக்கிய துறைமுகங்கள் வலியுறுத்தியுள்ளது. முழுமையற்ற விண்ணப்பம் அல்லது முறையான வழியின் மூலம் பெறப்படாத விண்ணப்பங்கள் அல்லது உரிய தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
சம்பள விவரம்:
நிர்வாக இயக்குநர் (Managing Director) பதவிக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ.1,80,000 முதல் 3,20,000 வரையிலான ஊதியம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு சென்னை துறைமுக ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள Notification அதிகாரபூர்வ அறிவிப்பை அணுகலாம்.