job news
10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..சுங்க வரித்துறையில் வேலைவாய்ப்பு..இன்றே அப்ளை செய்யுங்க..
சென்னையில் உள்ள சுங்க வரித்துறையில் பல்வேறு காலிபணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பிற்கான அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் http://www.chennaicustoms.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதனை பற்றிய தகவல்களை பார்ப்போம்.
முக்கியமான தேதிகள்:
இப்பணிக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க தொடங்கும் நாள்: 10.06.2023
இப்பணிக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள்: 30.06.2023
காலிபணியிடங்கள்:
- ஹால்வாய் கம் குக் – 01
- கிளார்க்- 01
- கேண்டீன் அட்டண்டண்ட்- 08
கல்வி தகுதி:
- ஹால்வாய் கம் குக்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பினை தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும் அல்லது கேட்டரிங் படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
மேலும் சமையல் பணியில் 2 ஆண்டுகள் அனுபவமும் மற்றும் A கிரேடு தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
- கிளார்க்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பினை தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும் அல்லது வணிகத்துறையில் பட்டபடிப்பினை பெற்றாவராக இருத்தல் வேண்டும்.
மேலும் நிமிடத்திற்கு 35 வாரித்தைகளை ஆங்கிலத்திலும் மற்றும் 30 வார்த்தைகளை ஹிந்தியிலும் தட்டச்சு செய்யவும் வேண்டும்.
- கேண்டீன் அட்டண்டண்ட்:
மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயதினையும் அதிகபட்சமாக 25 வயதினையும் பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வினையும், தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வினையும், மத்திய அரசு ஊழியர்கள் 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இப்பணிக்கு விண்ணப்பங்கள் தபால் வழியாகவே வரவேற்கபடுகின்றன. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Additional Commissioner of Customs(Establishment)
General Commissionerate
Office of the Principal Commissioner of Customs,
Custom House, No. 60, Rajaji Salai,
Chennai – 600 001.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
https://chennaicustoms.gov.in/wp-content/uploads/2023/05/Recruitment-Notification-of-Canteen.pdf
இப்பணிக்கான விண்ணப்பத்தினை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://chennaicustoms.gov.in/wp-content/uploads/2023/05/Application-Form-for-Canteen.pdf