job news
ஐ.டி.ஐ முடித்துள்ளீர்களா?..நாணயங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்க..
Security Printing and Minting Corporation of India Ltd(SPMCIL) என்பது இந்திய அரசின் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், அங்சல் முத்திரை போன்றவற்றை தயார் செய்யும் பொறுப்பினை கொண்ட ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமானது தற்போது மும்பையில் உள்ள IGM ல் டெக்னிகல் பிரிவில் பல்வேறு காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://igmmumbai.spmcil.com என்ற முகவரிக்கு சென்று தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.
முக்கியமான தேதிகள்:
இப்பணிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தொடங்கும் நாள்: 15.06.2023
இப்பணிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்: 15.07.2023
காலியிடங்கள்:
- ஜூனியர் டெக்னீஷியன்(Fitter) – 24
- ஜூனியர் டெக்னீஷியன்(Turner) – 04
- ஜூனியர் டெக்னீஷியன்(Attendant operator Chemical Plant) – 11
- ஜூனியர் டெக்னீஷியன்(Moulder) – 03
- ஜூனியர் டெக்னீஷியன்(Heat Treatment) – 02
- ஜூனியர் டெக்னீஷியன்(Foundryman/ Furnaceman) – 10
- ஜூனியர் டெக்னீஷியன்(Blacksmith) – 01
- ஜூனியர் டெக்னீஷியன்(Welder) – 01
- ஜூனியர் டெக்னீஷியன்(Carpenter) – 01
- ஜூனியர் ஆபிஸ் அஸிஸ்டெண்ட்(B-3 level) – 06
- ஜூனியர் புல்லியன் அஸிஸ்டெண்ட்(B3 level) – 02
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 25 வயதினையும் 10, 11 ல் குறிப்பிட்ட பணிகளுக்கு 28 வயதினையும் பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் அக்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஐ.டி.ஐ படிப்பினை பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க ரூ. 600 விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், உடல் ஊனமுற்றோருக்கு கட்டணம் கிடையாது. ஆனால் தகவல் கட்டணமாக ரூ. 200 வசூலிக்கப்படுகிறது.
தேர்வு நிலை:
- கணினி தேர்வு
- திறன் தேர்வு
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.