job news
இந்திய ரயில்வே துறையில் அப்ரண்டீஸ் பணி: நாளையே விண்ணப்பிக்கக் கடைசி நாள்
ஆண்டுதோறும் அதிகமான வேலைவாய்ப்புகளை அள்ளித்தருகிறது இந்திய ரயில்வே துறை. அந்த வகையில் தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் பிலாஸ்பூர் கோட்டத்தில் டிரேடு அப்ரண்டிஷிப் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:
காலிப்பணியிடங்கள்: 548
(இவை கார்பென்டர்- 25, கோபா- 100, ட்ராப்ட்ஸ்மேன் (சிவில்)-6, எலெக்ட்ரீசியன்-105, எலக்ட்ரானிக் (மெக்கானிக்)- 6, பிட்டர் – 135, மெஷினிஸ்ட்- 5, பெயிண்டர்-25, பிளம்பர் – 25, ஷீட் மெட்டல் ஒர்க் – 4, ஸ்டெனோ (ஆங்கிலம்) – 25, ஸ்டெனோ (இந்தி) – 20, டர்னர் – 8, , வெல்டர் – 40, வயர்மேன் – 15, டிஜிட்டல் போட்டோகிராபர் – 4 என்றவாறு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. )
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு முறையாகப் படித்துத் தேர்ச்சி பெற வேண்டும். அல்லது அதற்குச் சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சிப் பெற்று இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட ஐடிஐ படிப்புகளில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வயதுத்தகுதி
விண்ணப்பதாரர்கள் 1.7.2023ம் தேதியின் படி குறைந்தபட்சமாக 15 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 24 வயது முடிந்திருக்கக் கூடாது. அரசுவிதிகளின் படி வயதுத்தளர்வு உண்டு.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட லிங்கில் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 3.6.2023
மேலும் விவரங்களுக்கு: