job news
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அப்ரண்டீஸ் பணிகள்
இஸ்ரோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டருக்கு (என்ஆர்எஸ்சி) அப்ரண்டீஸ் வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:
பதவியின் பெயர்: அப்ரண்டீஸ்
காலிப்பணியிடங்கள்: 70
(இவற்றில் பட்டதாரிகளுக்கு 17 இடங்களும், டெக்னீசியன்களுக்கு 53 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.)
கல்வித்தகுதி
பட்டதாரிகள் குறைந்தபட்சமாக 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பிடெக். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டெக்னீசியன்கள் குறைந்தபட்சமாக 60 சதவீத மதிப்பெண்களுடன் அந்தந்த துறையில் பிஇ அல்லது பிடெக்கில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டிப்ளமோ இன் கமர்ஷியல் அண்டு கம்ப்யூட்டர் பிராக்டீஸ் க்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து வணிகப் பயிற்சியில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை
பட்டதாரிகளுக்கு ரூ.9000 மும், டெக்னீசியன்களுக்கு ரூ.8000மும், டிப்ளமோவினருக்கு ரூ.8000மும் தரப்படும்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியானவர்கள் கீழ்க்கண்ட லிங்கில் சென்று ஆன்லைனில் 2.6.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: