job news
பட்டதாரிகளுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் அருமையான வேலை…! உடனே அப்ளை பண்ணுங்க…!
புது டெல்லியில் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (National Technical Research Organisation) அமைந்துள்ள மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இங்கு பல் மருத்துவம், பொது மற்றும் மகப்பேறு மருத்துவம், பிசியோதெரபி என பல்வேறு பதவிகளில் பணியாற்றும் வகையில் பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:
பதவியின் பெயர்: கன்சல்டன்ட் (டாக்டர்)
காலிப்பணியிடங்கள்: 5
கல்வித்தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுகலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத்தகுதி
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 45 வயது முதல் அதிகபட்சமாக 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை
தகுதிவாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் 3 ஆண்டுகள் பணிபுரியும் வகையில் அமர்த்தப்படுவர். பணி திருப்தியாக இருக்கும்பட்சத்தில் மேலும் 3 ஆண்டுகளுக்குப் பணி நீட்டிப்பு செய்யப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் திறமையும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை நன்கு படித்து முறையாகப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
இதை வரும் 29.05.2023ம் தேதிக்குள் கொடுக்கப்பட்ட முகவரிக்கு சென்றடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
முகவரி
Deputy Director (R & P)
National Technical Research Organisation
Block-lll, Old JNU Campus
New Delhi-110067