Connect with us

job news

மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் வேலை…! நல்ல வாய்ப்பை நழுவ விடாதீர்கள்

Published

on

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ஓஎன்ஜிசி (ONGC). அதாவது எண்ணை மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (Oil and Natural Gas Corporation Limited). இது மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப்பெரிய நிறுவனம். டேராடூனை தலைமையகமாகக் கொண்டு நாடு முழுவதும் இயங்கி வருகிறது.

ஓன்ஜிசி நிறுவனத்தின் அகமதாபாத் பிரிவில் தற்போது ஜூனியர் கன்சல்டன்ட் (இளநிலை ஆலோசகர்), அசோசியேட் கன்சல்டன்ட் (இணை ஆலோசகர்) பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ONGC Job

இணை ஆலோசகர் பதவிக்கு இதே பணியில் இளநிலை ஆலோசகர் (இ1), இணை ஆலோசகர் (இ3) அளவிலான பணியில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

வயதுத்தகுதி

அதிகபட்சமாக 65 வயது.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் வகிக்கும் பணியின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும். இளநிலை ஆலோசகர் பதவிக்கு முதலாம் ஆண்டில் ரூ.42 ஆயிரமும், 2ம் ஆண்டில் ரூ.43 ஆயிரத்து 350ம் வழங்கப்படும்.

இணை ஆலோசகர் பதவிக்கு முதலாம் ஆண்டு ரூ.68 ஆயிரமும், 2ம் ஆண்டு ரூ.70 ஆயிரமும் மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை

தகுதிவாய்ந்தவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.05.2023ம் தேதிக்குள் கீழ்க்கண்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்ட படி [email protected]  என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும். காலதாமதம் ஆகாமல் விண்ணப்பித்து விட வேண்டும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *