job news
RBI ல் மருத்துவராக பணிபுரிய அரிய வாய்ப்பு..வாய்ப்பை தவற விடாதீர்கள்..
இந்தியாவின் மைய வங்கியாக செயல்படுவது ரிசர்வ் வங்கியாகும். இதுவே அனைத்து வங்கிகளின் தலைமை வங்கியாகும். இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இதன் கட்டுபாட்டின் கீழ் மட்டுமே இயங்கும். இப்படியான வங்கி தற்போது உத்திரபிரதேசத்தில் மாநிலத்தில் உள்ள லக்னோவில் ஒப்பந்த அடிப்படையில் வங்கி மருத்துவ ஆலோசகருக்கான காலிபணியிடம் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
முக்கியமான தேதிகள்:
இப்பணிக்கான விண்ணப்பங்கள் வருகின்ற ஜுன் 30, 2023 வரை பெற்று கொள்ளப்படும்.
கல்வி தகுதி:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் மெடிக்கல் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் MBBS பட்டபடிப்பினை முடித்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்.
வருமானம்:
இந்த பணிக்கான ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1000 வீதம் மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வேண்டும். மேலும் மொபைல் கட்டணமாக மாதத்திற்கு ரூ. 1000 கொடுக்கப்படுகிறது.
தேர்வு நிலை:
- நேர்காணல்
- மருத்துவ பரிசோதனை
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Director,
Human Resource Management Department,
Reserve Bank of India,
8-9 Vipin Khand,
Gomtinagar,
Lucknow- 226010.
மேலும் விவரங்களை கீழே உள்ள பக்கத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4266