job news
ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..100+ காலியிடங்கள்..பயன்படுத்திகோங்க..
வங்கி பணிக்காக காத்திருப்பவர்களுக்காக ரெப்கோ நுண்கடன் நிறுவனம் தற்போது 140 அலுவலருக்கான காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுகின்றன. மேலும் தகவல்களை காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இப்பணிகளுக்கு வருகின்ற 19.07.2023ஆம் தேதிக்குள் https://www.repcomicrofin.co.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
காலிபணியிடங்கள்:
- சீனியர் மேனேஜர் – 10
- மேனேஜர்- 10
- டெபுட்டி மேனேஜர் – 35
- அஸிஸ்டென்ட் மேனேஜர் – 35
- அட்மினிஸ்ட்ரேடிவ் அஸிஸ்டெண்ட் – 50
வயது வரம்பு:
- சீனியர் மேனேஜர் – 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- மேனேஜர் -35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- டெபுட்டி மேனேஜர் – 30 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- அஸிஸ்டென்ட் மேனேஜர்- 28 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- அட்மினிஸ்ட்ரேடிவ் அஸிஸ்டெண்ட்- 28 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி:
ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 3 முதம் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
ஆண்டு வருமானம்:
ஆண்டு வருமானமாக குறைந்தபட்சம் ரூ.3.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.8லட்சம் அளிக்கப்படுகிறது.
விண்ணப்பக்கட்டணம்:
இப்பணிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது.
தேர்வு நிலை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.repcomicrofin.co.in/pdf_files/Notification_2023%20v1.pdf