job news
தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும்… திருக்கோவிலில் வேலை…!
திருச்சி மாவட்டம், திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தட்டச்சர், உதவி மின் பணியாளர், காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்து மதத்தைச் சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு.
காலிப்பணியிடங்கள்
தட்டச்சர் – 1
உதவி மின் பணியாளர்-1
காவலர் – 4
துப்புரவாளர் -1
கல்வித்தகுதி
தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவி மின் பணியாளர் பதவிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் அல்லது மின் கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். (ஐடிஐ – வயர்மேன்)
காவலர் மற்றும் துப்புரவாளர் பதவிகளுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்.
வயதுத்தகுதி
1.7.2023ம் தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பளம்
தட்டச்சர் பதவிக்கு ரூ.18500 முதல் 58,600 வரை தரப்படுகிறது. உதவி மின் பணியாளர் பதவிக்கு ரூ.16600 முதல் 52400 வரை வழங்கப்படுகிறது. காவலர் பதவிக்கு 15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. துப்புரவாளர் பதவிக்கு ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அதில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து 11.5.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: