latest news
கல்லீரல் கொழுப்பில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம்?.. வாங்க பார்ப்போம்..
கல்லீரல் என்பது நமது உடலில் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும். நாம் உண்ணும் உணவானது கல்லீரலுக்கு சென்று பின்பு அங்கு செரிமானமாக்கப்பட்டு பின்பு தேவையில்லாத நச்சு பொருட்களை நமது உடலில் இருந்து விடுவிக்கிறது. இவ்வாறான கல்லீரலை நாம் உண்ணும் உணவால் கெடுக்கிறோம். நாம் உண்ணும் உணவில் அதிக கொழுப்பு இருந்தால் அது இதில் தங்கி பின் கொழுப்பானது கல்லீரலை சுற்றி ஒரு அடுக்காக உருவாகிறது். இதனால் நமது உடலில் பல பிரச்சினைகள் ஏற்படுவதோடு ஒரு கட்டத்தில் நமது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுவிடுகிறது. நாம் நமது உணவு பழக்கத்தில் சில மாறுதல்களை கொண்டு வருவதன் மூலம் கல்லீரல் கொழுப்பினை வர விடாமல் தடுக்கலாம்.
உணவில் 50% காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்:
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் பாதியளவு காய்கறிகளை சேர்ப்பதன் மூலம் நாம் நமது கல்லீரலை சுத்தமாக வைத்து கொள்ளலாம். இந்த காய்கறிகளை பொறுத்தோ அல்லது சூப் வடிவிலோ அல்லது குழம்பு வடிவிலோ நாம் அன்றாடம் உண்ணலாம்.
சற்று புளித்த உணவை சாப்பிடுதல்:
நமது உணவில் இயற்கையாக புளிக்க வைக்கப்படும் பொருட்களான கஞ்சி, ராகி கூழ், தயிர், மோர் போன்ற பொருட்களை சேர்ப்பதால் நாம் நமது கல்லீரலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளலாம்.
சூடான நீர் மற்றும் எலுமிச்சை சாறு:
நாம் தினமும் சாப்பிட்டு முடித்தபின் வெதுவெதுப்பான நீரை அருந்தினால் கல்லீரலை பாதுகாக்கலாம். மேலும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதனால் அதில் உள்ள அமிலம் நமது உணவை நன்கு செரிக்க வைக்கிறது. இதனால் நமது உணவு நன்கு செரிமானமாகி நமது உடலுக்கும் நன்மை பயக்கிறது.
நார்சத்துள்ள உணவுகள்:
நார்சத்துள்ள உணவு வகைகளை நாம் சாப்பிடுவதால் நமது உணவில் உள்ள கொழுப்பினை நன்கு செரிக்க வைத்து தேவையில்லாத கொழுப்பினை கரைய செய்கிறது.
பேக்டு ஃபுட்ஸ்:
பிஸ்கட், பிரட், கேக்ஸ் போன்றவை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிக்க செய்கிறது. இதனால் கல்லீரலை சுற்றி கொழுப்பை தேங்க வைக்கின்றது. இந்த மாதிரி உணவுகளை தவிர்ப்பது நமது கல்லீரலுக்கு நல்லது.
பூண்டு:
பூண்டில் அல்லிசின் எனும் வேதிபொருள் உள்ளதால் அது நமது கல்லீரலில் ஏற்படும் தேவையில்லாத ஒவ்வாமையை தடுக்கிறது.
கீரை, நட்ஸ் உண்ணுதல்:
கரையக்கூடிய கொழுப்பு அமிலங்கள், மினரல்கள், விட்டமின் நிறைந்த உணவுகளை நமது அன்றாட வாழ்வில் சேர்ப்பதாலும் நாம் நமது கல்லீரலை நல்ல முறையில் வைத்துகொள்ளலாம்.