latest news
தோழி ரூபத்தில் வந்த அரக்கி… பாலியர் டார்ச்சர் முதல் குளியல் வீடியோ வரை… இப்படி கூட நடக்குமா?
பொதுவாக தனியாக தங்கி இருக்கும் பெண்களுக்கு பாலியல் டார்ச்சர் முதல் ஏதாவது தொல்லைகளை ஆண்கள் தான் இதுவரை கொடுத்து வந்ததாக செய்திகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் துணைக்கு நம்பிய தோழியே கொடுத்த இம்சைகளால் இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தை நாடிய இருக்கும் சம்பவம் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
சென்னையின் திருமங்கலம் பகுதியில் தோழிகளுடன் வீடு எடுத்து தங்கி இருக்கிறார் இளம்பெண் ஒருவர். தந்தை மத்திய அரசு பணியிலும் தாய் தனியார் வேலையிலும் இருந்ததால் வீட்டில் இருக்க பிடிக்காமல் தனியாக தோழிகளுடன் தங்கி பிரபல கல்லூரியில் படித்து வந்தார். எப்போதும் போல கல்லூரி வாழ்க்கை அவருக்கு முதலில் இனிமையாக அமைந்தது.
பின்னர் அவர் தங்கி இருந்த வீட்டில் இன்னொரு தோழியின் மூலம் நங்கநல்லூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தங்க வந்திருக்கிறார். அதிலிருந்து தான் அவருக்கு பிரச்சினை தொடங்கி இருக்கிறது. இரண்டாவதாக தங்க வந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை தெரிந்தவர். குடி, போதை பழக்கங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இவருடன் பழகிய அந்த இளம் பெண்ணும் போதை பழக்கத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
இதை பயன்படுத்திக் கொண்ட இரண்டாவது பெண் அந்த இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தன்னுடைய ஆண் நண்பரையும் அந்த வீட்டிற்கு வரவைத்து அவருக்கு தொல்லை கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் தான் இளம்பெண் குளிக்கும்போது அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார்.
அந்த வீடியோவை பெற்றோருக்கு அனுப்பி விடுவேன் என்றும் சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என கூறியும் அவரை தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதை எடுத்து இளம் பெண்ணின் தந்தைக்கு அந்த வீடியோவுடன் ஆபாசமாக ஆடியோவையும் அனுப்பி இருக்கிறார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்கள் மகளை உடனே வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அந்த வீடியோவை ஆதாரமாக சமர்ப்பித்து பெண்ணின் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். அப்பெண்ணிற்கு மனநல கோளாறு இருப்பதாக கூறி வழக்கறிஞர் வாதிட்டு அவருக்கு தற்போது மனநல சிகிச்சை தொடங்கப்பட்டிருக்கிறது. பெண்ணை இன்னொரு பெண்ணிற்கு கொடுத்த இந்த தொல்லை அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.