Connect with us

india

`அனைவருக்குமானது AI’ – இத்தாலி G7 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?

Published

on

தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்கள் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்று இத்தாலி G7 மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

இத்தாலியில் நடைபெற்ற G7 உலக நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மாநாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

மாநாட்டில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு குறித்து பிரதமர் மோடி பேசுகையில்,`மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே தொழில்நுட்ப வளர்ச்சி வெற்றிகரமானதாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சியின் அனைத்து கூறுகளும் அனைவரையும் சென்றடைந்து, அதன்மூலம் சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகள் களையப்பட வேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்; மாறாக அழிவுக்குப் பயன்படக் கூடாது. அதுதான் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்’ என்று குறிப்பிட்டார். மேலும், `அனைவருக்கும் AI’ என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து உழைத்து வரும் இந்தியா, இந்த விவகாரத்தில் உலக நாடுகளின் ஒத்துழைப்பை நாடுவதாகவும் பிரதமர் மோடி பேசினார்.

இதேபோல், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் மூலம் இந்திய மக்கள் தனக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இதையும் படிங்க: சூறையாடப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம்… சாதி மறுப்பு திருமணத்துக்கு இப்படியா?

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *