Connect with us

Cricket

அரையிறுதிக்கு சென்றாலும் இந்தியா அணியில் தொடரும் சிக்கல்… ஜெய்ஸ்வாலா? விராட் கோலியா?

Published

on

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் விராட் கோலி தொடர்ந்து தடுமாறி வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டி20 உலக கோப்பை போட்டிகளில் கடந்த 6 போட்டிகளில் விராட் கோலி 66 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கிய போட்டியில் கூட டக் அவுட் ஆனதும், சரியான ஸ்டைக் ரேட் இல்லாததும் ரசிகர்களுக்கு பெரிய அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது.

கடந்த ஒரு வருடமாகவே விராட் கோலி டி20 போட்டிகளை தவிர்த்து வந்தார். அந்த இடத்தில் ஜெய்ஸ்வால் விளையாடி வந்தார். டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் அணிக்குள் இறங்கினார். அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலிக்கு இடம் கொடுக்க வேண்டியதானது.

மேற்கிந்திய தீவுகளில் இருக்கும் ஆடுகளங்கள் மந்தமானதாக இருக்கும். மேலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும் விராட் கோலியால் ரன் சேர்க்க முடியாது என்றே நிபுணர்கள் கணித்திருந்தனர். இதனால் அவருக்கு பதில் தொடக்க வீராராக அணியில் இருக்கும் ஜெய்ஸ்வாலை அணி வரும் போட்டிகளில் பயன்படுத்துமா என எதிர்பார்க்கப்படுகிறது.

google news