india
சபாநாயகர் பதவி கொடுக்க முடியாது!.. சந்திரபாபு நாயுடுவிடம் கை விரித்த பாஜக!..
நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. குறிப்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் கூட்டணியில்தான் ஆட்சி அமைத்திருக்கிறது பாஜக. வருகிற 24ம் தேதி பாராளுமன்றம் கூடுகிறது.
24 மற்றும் 25 தேதிகளில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பார்கள். கேரளா காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதன்பின் சுரேஷ் புதிய எம்.பி.க்கள் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
அதன் பின்னரே புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். சபாநாயகர் பதவியை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கேட்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அது முக்கியமான பதவி என்பதால் அதை தானே வைத்துக்கொள்ள பா.ஜ.க விரும்புகிறது. பாஜக மூத்த தலைவர்களின் கருத்தும் இதுதான்.
எனவே, சபாநாயகர் பதவியில் பாஜக எம்.பி. ஒருவரே அமர வைக்கப்படுவார் என சொல்லப்படுகிறது. ஆந்திர மாநில பாஜக தலைவர் மற்றும் நடப்பு எம்.பி புரந்தேஸ்வரி, ஆறு முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராதா மோகன் சிங், முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா ஆகிய மூவரும் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் சபாநாயகராக தேர்ந்தெடுகப்படுவார் என செய்திகள் கசிந்திருக்கிறது.