latest news
மகளிர் கால்பந்து போட்டியில் எதிரணியை உளவு பார்த்த கனடா… என்ன நடந்தது தெரியுமா?
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பரபரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் எதிரணியை உளவு பார்த்த கனடா அணிக்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
புதன்கிழமை நடக்க இருக்கும் போட்டிக்காக நியூசிலாந்து கால்பந்து பெண்கள் அணி பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. இதை கனட அணி ட்ரோன் மூலம் உளவு பார்த்து ஆறு புள்ளிகளை இழந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த அணியின் மூன்று பயிற்சியாளர்களும் ஒரு வருடத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளனர்.
22 ஆம் தேதி நியூசிலாந்து அணி பயிற்சி பெற்றபோது ட்ரோன் ஒன்று அவர்களை வட்டமடித்ததாக கூறப்படுகிறது. இதை எடுத்து பயிற்சி ஆட்டம் உடனே நிறுத்தப்பட்டு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. நியூசிலாந்து மகளிர் அணியினரின் திட்டங்களை உளவு பார்த்ததாக கூறி கனடா கால்பந்து சங்கத்திற்கு 226,000 டாலர் அபராதமும் விதித்துள்ளது ஃபிஃபா.
அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் பயிற்சியாளர் பெவ் பிரிஸ்ட்மென் ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளார். மேலும், கனடா கால்பந்து சங்கத்தின் அதிகாரிகளான ஜோசப் லம்போர்டி மற்றும் ஜஸ்மீன் மண்டிர் ஆகியோரை ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.