latest news
இந்த வாரம் மழை வாரம்…ஆராய்ந்து சொன்ன ஆராய்ச்சி மையம்!…
தமிழ் நாட்டில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை தீவிரம் காட்டி வருகிறது. சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் கடந்த வாரம் இது வரை பெய்துள்ள மழை அளவை புள்ளி விவரங்களோடு தெரியப்பட்துத்தியிருந்தது. அதன்படி சராசரியை விட இந்தாண்டிற்கான மழைப் பொழிவு அதிகமாக இருந்ததாக உறுதி செய்யப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் லேசானது முதல் முதமானது வரையிலும் , சில இடங்களில் கன மழை பெய்து வந்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் அவ்வப்போது மழை பெய்ததாகவும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லி வந்தது. தமிழகம் முழுவதும் வீசிய தரைக்காற்றின் வேகமும் அதிகரித்தது.
தென் மாநில கடலோர பகுதிகளில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டும் என்றும் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இப்படித் தான் இருந்து வந்தது தமிழகத்தின் தட்ப வெப்ப நிலை.
நீலகிரி மாவட்டத்தில் சில நாட்களுக்கும் முன்னர் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
இப்படி தமிழகத்தின் பல இடங்களில் மழை தனது தாக்கத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் இன்று ஐந்தாம் தேதியன்று மிதமானது முதல் லேசனாது வரையிலான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியுள்ளது.
இன்று துவங்கும் இந்த மழை பொழிவு அடுத்த ஏழு நாட்கள் வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.