india
ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு!.. கட்டித்தழுவி வாழ்த்திய பிரதமர் மோடி..
நடிகர் மற்றும் மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவின் உறவினர் சந்திரபாபு நாயுடு. 1995 – 1999 மற்றும், 1999 – 2004 வருடங்களில் ஆந்திராவின் முதலமைச்சராக இருந்தவர். தெலுங்கு தேசம் என்கிற கட்சியின் தலைவர் அவர். 2014 முதல் 2019ம் வருடம் வரை மீண்டும் ஆந்திராவின் முதல்வராக இருந்தார்.
அதன்பின் ஒய்.எஸ்.காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார். கடந்த 5 வருடங்களில் ஜகன் மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் பல மோதல்கள் எழுந்தது. சந்திரபாபுவை கைது செய்து சிறையில் அடைத்தார் ஜெகன் மோகன் ரெட்டி. இதுவே மக்களின் அனுதாபத்திற்கு காரணமாக அமைந்தது.
இந்நிலையில், ஆந்திராவில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதோடு, மத்தியில் மோடி தலைமையிலான ஜனநாயக கூட்டணிக்கு சந்திராபு நாயுடு தனது ஆதரவை கொடுத்தார். எனவே, மோடி பிரதமராக பதவியேற்றுகொண்டார்.
இந்நிலையில்தான், 4வது முறையாக ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். அப்போது சந்திரபாபு நாயுடுவை பிரதர் மோடி கட்டித்தழுவி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
சந்திரபாபு நாயுடு தலைமையின் கீழ் 24 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். இதில் நடிகர் பவன் கல்யாண் துணை முதல்வராக பதவி பெறுவதும் உறுதியாகி இருக்கிறது.