Connect with us

Featured

கூகுளில் மேலும் ஒரு இந்தியர்!…சென்னையில் படித்தவராமே!…

Published

on

Google

உலக அளவில் இந்தியர்களின் ஆளுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நாடுகளில் முக்கிய பல பொறுப்புகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.உலகினை ஆட்டிப் படைக்கும் முக்கிய நிறுவனங்கள் கூட இந்தியர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறது இப்பொதெல்லாம்.

இந்தியாவில் கல்வி பயின்று இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர்கள், பொறியாளர்கள் என பல்வேறு  துறைகளில் இந்தியர்களின் ஆதீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது உலகம் முழுவதிலும். இந்தியாவிலிருந்து கொண்டே சர்வதேச நாடுகளில் உள்ள நிறுவனங்களின் பணிகளை கவனித்தும், அந்த நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்து வரும் இந்தியர்கள் இருக்கின்றார்கள்.

கூகுள் தலைமைச் செயல் அதிரகாரியாக இந்தியர் சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகிறார். மைக்ரோசாப்ட், நோக்கியா, ஐபிஎம், அடோப் போன்ற உலகின் தலை சிறந்த நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் முக்கிய பொறுப்புகளை தாங்கி நிற்கின்றனர்.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. சென்ன ஐஐடியில் பட்டம் பெற்ற வரும், கலிபோர்னியாவின் பெர்கிலி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளவருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபாகர் ராகவன் கூகுள் நிறுவனத்தின் தலைமை தொழில் நுட்ப நிபுணராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Prabhakar Raghavan

Prabhakar Raghavan

கூகுள் கிளவுட், கூகுள் ஆப்ஸ் ஆகிய துறைகளுக்குத் தலைமை தாங்கியிருந்த பிரபாகர் ஜி மெயில், கூகுள் ட்ரைவ் ஆகியவற்றை மேலான்மை செய்துள்ளார்.

2012ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்ட 64வயதான பிராபகர் ராகவன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக துறை சார்ந்து இயங்கி வரும் இவர், நூற்றுக்குமேற்பட்ட ஆராய்ச்சித் தாள்களை பிரசூரம் செய்ததோடு மட்டுமல்லாமல். 20 காப்புரிமைகளை தன் வசம் வைத்துள்ளார்.

 

google news