இனி கோவிந்தா போட்டே ஆகனுமாம்!…திருப்பதிக்கே வந்த திருப்பம்?…

0
66
Tirupathi
Tirupathi

திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க நாள் தோறும் மக்கள் கூட்டம் அலைமோதியே வருகிறது. இந்தியா முழுவதுமல்ல உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ள வழிபாட்டுத்தலமாக திருப்பதி மாறி வருகிறது. உலகம் முழுவதுமிருந்தும் ஸ்ரீனிவாச பெருமானை தரிசிக்க பக்தர்கள குவிந்து வருகின்றனர்.

அதே போலத் தான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினசரி தரிசனத்திற்கான பயணத்தை துவங்ககுகின்றனர் அதிகமான பக்தர்கள். அதிலும் திருப்பதி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வார இறுதி நாட்களில் வரும் பக்த கோடிகளின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது.

இதுவரை ஒரே நாளில் அதிகபட்சமாக அறுபத்தி ஐந்தாயிரத்து நூற்றி முப்பத்தி நாளு பேர் வந்து திருமலையானை தரிசித்துச் சென்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.

TIRUPATHI
TIRUPATHI

கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் திருக்கோவில் உண்டியலில் நாலுகோடியே இருபத்தி ஏழுலட்ச ரூபாய் (ரூ.4.27/-கோடி) வசூலாகியுள்ளதாகவும், அதே போல ஒரே நாளில் இருபத்தி ஆறாயிரத்து நூறு பேர் (26,100 பேர்) முடிக்காணிக்கை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது கோவில் தேவஸ்தானம். இதன் படி ஊழியர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொள்ளும் போது ‘கோவிந்தா அல்லது ஓம் நமோ வெங்கடேசாய’ என சொல்லிய பின்னரே பேசத்துவங்க வேண்டும்.

அதே போல கோவிலில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் சனிக்கிழமை பணிக்கு வரும் போது வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்தே தான் பணிக்கு வரவேண்டும் என்றுள்ளது. அப்படி வரும் ஊழியர்கள் தங்களது நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து தான் வர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதே மாதிரித் தான் கோவிலில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு பற்றிய அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் புடவை, ஜாக்கெட், சுடிதார் அணிந்து வரலாம். சுடிதார் அணிந்து வருபவர்கள் கட்டாயம் துப்பட்டா அணிந்து தான் வர வேண்டும், நெற்றியில் குங்குமம், திலகம், ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிப்பின் மூலம் சொல்லப்பட்டுள்ளது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here