latest news
ஆப்ரேஷன் ஸ்டார்ட்…! ரவுடிகளை ஒடுக்க புது சென்னை போலீஸ் கமிஷ்னரின் முதல் அடி.. நெத்தியடி…!
சென்னை காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவது தான் தன்னுடைய முதன்மை பணி என்று பேசி இருக்கின்றார்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்றும், அதனை திமுக அரசு பேணி காக்க தவறிவிட்டது என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இந்த சூழலில் தற்போது ஒரு அதிரடி உத்தரவு வெளியானது. அதாவது சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றார்.
அவருக்கு பதிலாக தற்போது சட்ட ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு சந்தீப் ராய் ரத்தோரை இடமாற்றம் செய்த சில மணி நேரங்களிலேயே புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார் அருண். இந்நிலையில் பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதிய காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் தெரிவித்திருந்ததாவது:
சென்னை மாநகரம் எனக்கு புதிதல்ல. இங்கு எல்லா பிரிவுகளிலும் நான் பணியாற்றி இருக்கின்றேன். டிசி அண்ணா நகர், டிசி மவுண்ட், ஜேசி டிராபிக், ஜேசி சவுத் அடிஷனல் கமிஷனர், டிராஃபிக் அட்டிஷனல் கமிஷனர், நார்த் சென்னை சிட்டியில் இருக்கக்கூடிய பல சட்ட ஒழுங்கு பிரச்சனை குற்றச்சாட்டு நடவடிக்கைகள் போக்குவரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் ரவுடிகளை கட்டுப்படுத்துவது, போலீசில் நடைபெறும் கரக்சன், கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வருவது என் வேலை.
சென்னை சிட்டியில் எல்லா இடத்திலும் நான் வேலை பார்த்திருக்கிறேன். இது ஒரு கூடுதல் பொறுப்பு அவ்வளவுதான். சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றால் ஒரு பேசிக் ஸ்டாடிஸிக்ஸ் இருக்க வேண்டும் காலம் காலமாக குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதை தடுத்துக் கொண்டது தான் இருக்கின்றோம். அப்படி பார்க்க 2021 -22 ல் நடந்த கொலைகளை காட்டிலும் தற்போது கொலைகளின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கின்றது.
இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் ரவுடிகள் அட்ராசரியை கட்டுப்படுத்த வேண்டும். தற்போது தான் பொறுப்பு ஏற்றுள்ளேன். இது தொடர்பாக விசாரித்து சரியாக செயல்படாத காவல்துறை அதிகாரிகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். ரவுடிகளை கட்டுப்படுத்துவது தான் என்னுடைய முதன்மை பணி என்று அவர் பேசியிருக்கிறார்.