Connect with us

india

வந்தே பாரத் ரயிலில் கொடுத்த உணவில் கரப்பான்பூச்சி… அதுக்குனு இப்படியா?

Published

on

இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படும் வந்தே பாரத்தில் பயணிகளுக்கு பிரத்யேகமாக உணவுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து தனியாக வசூலிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கொடுக்கப்படும் உணவின் தரம் குறித்து தற்போது கேள்வி எழுந்து இருக்கிறது.

போபாலில் இருந்து ஆக்ராவுக்கு விதித் வர்ஷ்னே என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்து இருக்கிறார். அப்போது அவருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. சாப்பிடலாம் என கவரை பிரித்தவருக்கு அதிர்ச்சி, பருப்பில் கரப்பான் பூச்சி கிடந்து இருக்கிறது. உடனே அதை புகைப்படமாக எடுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடிச்சி இறந்தவர்களுக்கு எதற்கு நிதி?!.. பிரேமலதா ஆவேசம்!..

அந்த பதிவில், ரயில் போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் அமைச்சரை டேக் செய்து இருந்தார். இந்த பதிவு வைரலானது. அந்த பதிவுக்கு, இந்திய ரயில் உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகமும், ரயில் போக்குவரத்து துறையும் பதில் அளித்து இருக்கிறது.

இச்சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியதுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதில் ட்வீட்டில், உங்கள் பயணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்துக்கு மன்னிப்பு கோருகிறோம். உணவு வழங்கு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் ட்வீட்டை காண: https://x.com/IRCTCofficial/status/1803685353120997829

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

குடிச்சிட்டு வந்து அலும்பா பண்ற… மனைவி செய்த காரியத்தால் பதறிய கணவன்!

Published

on

By

மனைவி தனது கை, கால்களைக் கட்டிவிட்டு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக தெலங்கானாவில் கணவர் ஒருவர் போலீஸில் புகார் கொடுத்த சம்பவம் நடந்திருக்கிறது.

தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத்தை அடுத்த மச்சிப்பா தண்டா பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதையறிந்து மகேஷின் குடும்பத்தினரும் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அவரிடம் அறிவுறுத்தவும் செய்திருக்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்குப் போன மகேஷ் மனைவியை அடிக்கத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவரின் மனைவி மகேஷை வீட்டில் கட்டி வைத்திருக்கிறார். கை, கால்களை பிணைத்து வைத்ததுடன், அடுப்பில் எரிந்துகொண்டிருந்த கட்டை ஒன்றை எடுத்து வந்து உடலின் பல இடங்களிலும் சூடு வைத்ததாக சொல்லப்படுகிறது.

இதில், காயமடைந்த மகேஷூக்கு அவரின் மனைவியே மருந்தும் போட்டு பராமரித்து வந்திருக்கிறார். இரண்டு நாட்களில் காயம் சிறிது ஆறிய நிலையில் நிஸாமாபாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மகேஷ், நடந்த விஷயங்களைச் சொல்லி மனைவி மீது புகார் அளித்திருக்கிறார்.

google news
Continue Reading

india

பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை!. அரசு அதிரடி அறிவிப்பு!..

Published

on

women

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு மாத மாதம் உரிமைத்தொகை கொடுப்போம் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்தது. அதன்பின் அதே வாக்குறுதியை திமுகவும் கொடுத்தது. தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

எனவே, தகுதியான பெண்களுக்கு மாதம் உரிமைத்தொகையாக ரூ.1000 கொடுக்கப்படும் என திமுக அரசு சொன்னது. சொன்னபடியே தற்போது அந்த திட்டம் நடைமுறையிலும் இருக்கிறது. இந்நிலையில், தமிழக அரசை பார்த்து தற்போது அண்டை மாநிலங்களும் இந்த திட்டத்தை முன் வைத்து பிரச்சாரங்கள் செய்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா அரசும் பெண்களுக்கு மாதா மாதம் நிதியுதவி அளிக்கப்படும் என கூறியிருக்கிறது. 21 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1500 உதவித்தொகையாக கொடுக்கப்படும் என அந்த மாநில அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது.

அந்த மாநிலத்தில் வருகிற அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில்தான் நிதியமைச்சர் அஜித் பவார் 2024-25 நிதியாண்டுக்காண பட்ஜெட்டில் இதை அறிவித்திருக்கிறார். மேலும், 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு வருடத்திற்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக கொடுக்கப்படும் எனவும் மின்சார கட்டன்ணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகளின் மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார். அதோடு, அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு 50 சதவீத கட்டணம் சலுகை எனவும் அஜித் பவார் அறிவித்திருக்கிறார்.

google news
Continue Reading

india

ரெண்டு கேக், 4 கிளாஸ் ஃப்ரூட் ஜூஸ் ரூ.1.22 லட்சமா?…. டேட்டிங் மோசடியால் மிரண்ட இளைஞர்!

Published

on

By

ஆன்லைன் டேட்டிங் செயலியான டிண்டரில் சந்தித்த பெண்ணை சந்திக்கச் சென்ற டெல்லி இளைஞர் ஒருவர் மோசடியால் ரூ.1.21 லட்சத்தை இழந்த சம்பவம் நடந்திருக்கிறது.

யுபிஎஸ்இ தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்கிற துடிப்போடு டெல்லியில் படித்து வருபவர் அந்த இளைஞர். டேட்டிங்கில் ஆர்வம் கொண்ட அவர் டிண்டர் செயலியில் வர்ஷா என்கிற இளம்பெண்ணைப் பார்த்திருக்கிறார். சில மாதங்களாக இருவரும் பேசிக்கொண்ட நிலையில், கடந்த 23-ம் தேதி அந்தப் பெண்ணின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக டெல்லியின் விகாஸ் மார்க் பகுதியில் உள்ள பிளாக் மிரர் கஃபேவில் சந்தித்திருக்கிறார்கள்.

கஃபேவில் கேக் வெட்டி கொண்டாடிய பிறகு அந்தப் பெண் பழரசம் ஆர்டர் செய்து குடித்திருக்கிறார். சிறிதுநேரத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு திடீரென உடல்நிலை மோசமானதாகச் சொல்லிவிட்டு இடத்தை காலி செய்திருக்கிறார். அந்தப் பெண் சென்ற சிறிது நேரத்திலேயே கஃபே சார்பில் அவருக்கு ரூ.1,21,917.70 பில் கொடுத்திருக்கிறார்கள். என்னடா இது நாம் சாப்பிட்ட கேக்குக்கும் பழரசத்துக்கும் அதிகபட்சம் சில ஆயிரங்கள்தானே ஆகும் என்று அவர் அதிர்ச்சியான நிலையில், மிரட்டி அவரிடம் இருந்து பணத்தைப் பறித்திருக்கிறார்கள்.

பணத்தைக் கொடுத்துவிட்டு அவசரமாக வெளியேறிய அவர் நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்திருக்கிறார். போலீஸ் அந்த கஃபே உரிமையாளரான அக்‌ஷய் பாவாவை கைது செய்து விசாரித்ததில் இந்த கும்பலின் மோசடி அம்பலமானது. டெல்லி சுற்றுவட்டாரத்தில் டேட்டிங்கில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களைக் குறிவைத்து அஃப்சன் பிரவீன் என்பவர் பெண்களின் பெயரில் வலைவீசி பேசுவதும், பின்னர் நேரில் சந்திக்கவும் தூண்டுவாராம்.

நேரில் சந்திக்க வரும் நபரை சந்திக்க வேறொரு பெண்ணை அனுப்புவார்களாம். இதேபோல், அவசரம் என்று சொல்லி பாதியிலேயே அந்தப் பெண் நழுவிவிட குறிப்பிட்ட நபரிடம் மிரட்டி பணம் பறிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பறிக்கப்படும் மொத்தப் பணத்தில் அந்தப் பெண்ணுக்கு 15%, அஃப்சன் உள்ளிட்ட கஃபேவில் பணியாற்றும் நபர்களுக்கு 45% மற்றும் கஃபே உரிமையாளருக்கு 40% என பகிர்ந்துகொண்டதும் தெரியவந்திருக்கிறது.

google news
Continue Reading

india

ரூ.60 லட்சத்துக்காக பிச்சைக்காரர் கொலை… 17 வருடத்துக்குப் பின் வெளிவந்த மர்மம்!

Published

on

By

காப்பீட்டுப் பணம் ரூ.60 லட்சத்துக்காக பிச்சைக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 30-ல் ஒரு கார் விபத்து நடக்கிறது. அந்த கார் விஜய்பால் சிங் என்பவரின் மகன் அணில் சிங் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. விபத்தில் காரை ஒட்டிவந்த அணில் உயிரிழந்ததாக போலீஸில் சொல்லப்படுகிறது.

விஜய்பாலின் குடும்ப நண்பரான ரம்வீர் சிங்கும் அணில் சிங்கின் உடலை அடையாளம் காட்டவேம் காப்பீட்டுத் தொகையான ரூ.60 லட்சம் அவரின் குடும்பத்தினரிடம் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த விசாரணையில் தற்போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இன்சூரன்ஸ் பணத்த்துக்காக பிச்சைக்காரர் ஒருவருக்குத் தனது ஆடைகளை அணிவித்து, அவரை அணில் சிங் காரோடு சேர்த்து எரித்துக் கொன்றது அம்பலமானது. அகமதாபாத் குற்றவியல் போலீஸார் விசாரணையில், இறந்ததாக நம்பப்பட்ட அணில் சிங் கைது செய்யப்படுகிறார்.

இதையடுத்து, அவருக்கு உடந்தையாக இருந்த 62 வயதான ரம்வீர் சிங்கையும் ஜிபி நகர் போலீஸார் கைது செய்தனர். தான் இறந்ததாக போலியாக நம்பவைத்து இறப்பு சான்றிதழ் பெற்று காப்பீட்டு நிறுவனத்தை அணில் ஏமாற்றியிருப்பதை போலீஸார் உறுதி செய்ததை அடுத்து 17 ஆண்டுகளுக்குப் பின் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

google news
Continue Reading

india

பீகார் அதிச்சி: கட்டுமான பணி நடைபெற்ற பாலமும் அம்பேல்… 11 நாட்களில் இது 5-வது நிகழ்வு!

Published

on

By

பீகாரின் மதுபானி பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பாலம் இடிந்துவிழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுபானி பகுதியில் ஓடும் புத்தாஹி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம், பாதி பணிகள் முடிந்திருந்த நிலையில் இடிந்து விழுந்தது. அதேபோல், கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் பகதுர்கஞ்ச் பகுதியில் உள்ள மற்றொரு பாலமும் நேற்று இடிந்து விழுந்தது.

திடீர் கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, 70 மீ நீளமும் 12 மீ அகலமும் கொண்ட அந்தப் பாலத்தின் ஒரு தூண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, பாலம் இடிந்து விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து பேசிய விசாரணை அதிகாரி துஷார் சிங்க்ளா, `மகாநந்தா பகுதியில் உள்ள சிறிய குடியிருப்புப் பகுதியான மடியாவை கரைப் பகுதியோடு இணைக்கும் வகையில் கன்காய் ஆற்றின் மீது கடந்த 2011-ம் ஆண்டு கட்டப்பட்டது இந்தப் பாலம். ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நேபாளத்தின் பெய்துவரும் கனமழையால் ஆற்றில் நீர்வரத்து அளவுக்கு அதிகமானது. நீரின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆற்றின் ஒரு தூண் அடித்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை’ என்று தெரிவித்தார்.

இதேபோன்று பாலம் இடிந்துவிழுந்த 3 சம்பவங்கள் கடந்த வாரத்தில், அராரியா, சைவான் மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த 2 சம்பவங்களையும் சேர்த்து கடந்த 11 நாட்களில் 5 பாலங்கள் இடிந்துவிழுந்துள்ளன. இது பீகார் பொதுப்பணித்துறையின் தரமற்ற பணிகளையே காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

google news
Continue Reading

Trending