latest news
CPI -ஆ?.. CBI- ஆ?.. அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க!.. அதிமுக செஞ்ச வேலையை பாருங்க!…
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் அது விஷமாக மாறியது விசாரணையில் தெரியவந்தது. இதுவரை 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் பலரை தேடி வருகின்றனர்.
ஆந்திராவிலிருந்து கெட்டுப்போன மெத்தனாலை வாங்கி அதை கலந்து சாராயம் காய்ச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சாராயம் விற்பனை செய்யும் நபர்களை தேடிப்பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.
அதில், பல லிட்டர் சாராயங்கள் கீழே ஊற்றி அழிக்கப்பட்டு வருகிறது. இறந்து போனவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் கொடுப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளது.
இந்நிலையில், சிபிஐ விசாரணை வேண்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களிலும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. புதுச்சேரியில் கையில் ஏந்தியிருந்த பதாகைகளில் ‘CBI’ என்பதற்கு பதிலாக CPI என எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரையும் சிரிக்க வைத்திருக்கிறது.