india
பயணிகள் ரயில் மீது மோதிய சரக்கு ரயில்!.. 5 பேர் உயிரிழப்பு!.. மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி…
மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு வங்கம் டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் நேர் எதிராக வந்த சரக்கு ரயில் மோதியது. இதில் 5 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.
முதல்கட்ட விசாரணையில் சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்திருக்கிறது. சம்பவ இடத்திற்கு மருத்துவர்கள், தேசிய பாதுகாப்பு படையினர், ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு படையினர் சென்றிருப்பதாக முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்திருக்கிறார்.
அவர்கள் மீதமுள்ள பயணிகளை பத்திரமாக மீட்டு அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். மேலும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வசதி செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் விபத்து நடந்த பகுதில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இறந்து போன 5 பேர் பற்றி விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.