Cricket
அது வேற வாய்… இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு அம்னீஷியா? முன்னாள் வீரர் சாடல்…
இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பதவி ஏற்புக்கு முன்னர் ஒருமாதிரியும் தற்போது ஒரு மாதிரியும் பேசுவதாக முன்னாள் வீரரும், பிரபல விமர்சகருமான ஸ்ரீகாந்த் சாடி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, கம்பீர் ஏன் இப்படி அடிக்கடி மறந்துப் போய் மாற்றி பேசுகிறார். 2024ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்றால் என்னுடைய அணியில் வைத்திருக்க மாட்டேன் என கவுதம் கம்பீர் கூறினார். ஆனால் இப்போது நல்ல உடல்தகுதியுடன் இருந்தால் 2027ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்கிறார்.
ரோகித் ஷர்மா சிறந்த வீரர் தான். ஆனால் அவருக்கு தற்போது 37 வயதாகிவிட்டது. ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 3 வருடங்கள் ஆகும். அப்போ அவருக்கு 40 வயதாகும். அவரால் தென்னாப்பிரிக்காவில் உலக கோப்பைக்கு விளையாடினால் மயங்கிதான் விழுவார். தோனி போல் உடல்நிலை இருந்தால் ஓகே. இல்லையென்றால் இன்னொருவர் வாய்ப்பை பயன்படுத்தாமல் இருக்கலாமே எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதே வேளையில், விராட் கோலி சரியான உடற்தகுதியுடன் இருக்கிறார். அவர் ரோகித் ஷர்மாவை விட இரண்டு வயது இளையவர். அவரால் உலகக் கோப்பையில் விளையாட முடியும். ரோகித்தை பொறுத்தவரை அது நடக்காது என ஸ்ரீகாந்த் பேசி இருக்கிறார். இது தற்போது ரோகித் ஷர்மா ரசிகர்களிடம் கோபத்தினை கிளப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.