india
வேலைக்கு போட்டா போட்டி… அதுவும் 10 காலி இடங்களுக்கு தள்ளுமுள்ளு… வைரலான வீடியோ…!
குஜராத் மாநிலத்தில் 10 காலிப்பணியிடங்களுக்காக இளைஞர்கள் போட்டி போட்டு கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் ஜகதியா என்ற இடத்தில் தனியார் ரசாயன நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இதில் காலியாக இருக்கும் 10 இடங்களை நிரப்புவதற்காக நேர்காணல் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதற்கு 800க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு அந்த இடத்திற்கு வந்துள்ளார்கள்.
அங்கலீஸ்வரர் பகுதியில் நேர்காணல் நடத்த தனியார் ஓட்டலில் நுழைவு வாசலின் இரு பகுதியிலும் இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். பலர் கதவுக்கு வெளியே முட்டி மோதியபடி நின்றனர். பாதி பேர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பிகளின் மேல் ஏறியதால் அந்த கம்பி வளைந்து உடைந்தே போனது. இதில் பலரும் கீழே விழுந்தனர். இதில் யாருக்கும் அதில் காயம் ஏற்படவில்லை .
ये देश में बेरोज़गारी की ज़मीनी हक़ीक़त है.
मैं इसी की बात करती हूँ.
ये हालात देश के लिए ख़तरनाक हैं.
समय रहते इसका निदान नहीं हुआ तो बात हाथ से निकल जाएगी.
उस वक़्त सरकार जनसंख्या को दोष देकर कन्नी काट लेगी.
भुगतना आपको पड़ेगा. pic.twitter.com/e14ZWjfv0R
— Neha Singh Rathore (@nehafolksinger) July 11, 2024
இது குறித்து காங்கிரஸ் அரசு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பாஜக அரசை சாடி இருக்கின்றது. நாடு முழுவதும் வேலையின்மை காணப்படுகின்றது என்று குற்றம் சாட்டியிருந்தது. 10 காலி இடங்களை நிரப்புவதற்கு முறையான விஷயங்களை அவர்கள் கூறியிருக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு நிறுவனமே காரணம். இது வேதனை தருகின்றது. மீண்டும் இதுபோல் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கையை எடுக்கப்படும் என்று பாஜக எம்பி மன்சூர் வசாவா தெரிவித்திருக்கின்றார்.