Connect with us

cinema

பாசவலையில் சிக்கி கண்ணீர் சிந்திய இசையமைப்பாளர்…பரிசாகக் கிடைத்த பாடலாசிரியர்!…

Published

on

Music

திரைப்படங்களில் பாடல்கள் இருப்பது அந்த, அந்த சூழ்நிலைகள் மற்றும் காட்சிகளை இசை வடிவத்தில் ரசிகர்களுக்கு வழங்கி அவர்களது உணர்வுகளோடு உறவாடவேவும் கூட தான். பாட்டிற்கு மெட்டும், மெட்டிற்கு பாட்டும் என காட்சியை பொறுத்து  பாடல் வரிகள் எழுதப்படுகிறது.

ஒரு காலத்தில் திரைப்படம் வெளியாகிறது என்றால் அதில் அதிக எண்ணிக்கையில் பாடல்கள் இடம் பெற்றிருந்தன. ஐந்து நிமிட, பத்து நிமிட இடைவேளைகளில் அடுத்து பாடல்கள் வெளியாகி படங்கள் ஓடும் நேரத்திற்கு உறுதுணையாக இருந்து வந்தது.

கருப்பு – வெள்ளை காலங்களில் திரைப்படங்களில் அதிக அளவில் பாடல்கள் இடம் பெற்றிருந்தது. காலம் செல்லச் செல்ல படங்களில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டது. நாளடைவில் நான்கு, ஐந்து பாடல்கள் என சுருக்கப்பட்டது.

இப்போதெல்லாம் சில திரைப்படங்களில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்று வருகின்றன. மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாசவலை.

\அப்போதைய பிரபல பாடலாசிரியர்களால் கூட எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தியில் மெட்டிற்கும், அந்த காட்சி சூழலுக்கேற்ற வரிகளை எழுதிக் கொடுக்க முடியாத நிலை இருந்து வந்ததாம். இதனால் படத்தின் இசையமைப்பாளர்கள் கடுமையான கோபத்தில் இருந்திருக்கிறார்கள்.

படத்தில் நடித்திருக்கும் நடிகர் கோபால கிருஷ்ணன் இசையமைப்பாளர் எம்.எஸ்.வியை சந்திக்க வைக்க தனது நண்பர் ஒருவரை அழைத்து வந்திருக்கிறார். பாடல் சரியாக அமையாத கோபத்தில் இருந்த  இசையமைப்பாளர்கள் சந்திக்க நான்கு
ஐந்து நாட்களுக்கு மேலானதாம்.

அதனால் கோபால கிருஷ்ணன் அழைத்து வந்த அந்த நபர் ஒரு காகிதத்தில் ஏதையோ எழுதி நேரம் கிடைக்கும் போது படியுங்கள் எனச் சொல்லி சென்று விட்டார்.

Msv Pattukkottai

Msv Pattukkottai

திடீரென அதனைப் படித்துப் பார்த்த இசையமைப்பாளர்கள் அதில் இடம்பெற்றிருந்த வரிகளை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

அதனை எழுதிக்கொடுத்த அந்த நபரை அழைத்து பாராட்டி இருக்கிறார்கள். இசையமைப்பாளர்களால் பாராட்டப்பட்ட அந்த நபர் தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.  அவர் எழுதிக்கொடுத்த அந்த பாடல் தான் பாசவலை படத்தில் இடம்பெற்றிருக்கும் “குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம், குள்ள நரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம்…என்ற பாடல்.

பாடல் வரிகளை படித்துப் பார்த்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னை மறந்து அழத்துவங்கியிருக்கிறார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியிருந்த வரிகள் எம்.எஸ்.வியை அந்த அளவில் பாதித்திருக்கிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *