லாராவை பின்னுக்குத் தள்ளிய ஜோ ரூட்…டெஸ்ட் போட்டிகளில் புதிய உலக சாதனை…

0
144
Joe Root
Joe Root

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான பிரையன் லாராவின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். ஐம்பது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுண்சிலின் அங்கீகாரத்தை பெறத் தவறிய  முன்னாள் சாம்பியன் அணியான வெஸ்ட் இண்டீஸ் அணி இருபது ஓவர் உலக்கோப்பை போட்டிகளை அமெரிக்காவுடன் இணைந்து நடத்தியது.

சொந்த மண்ணில் தனது ரசிகர்களின் பலத்துடன் களமிறங்கிய இந்த அணி அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பினை இழந்து பரிதாபமாக வெளியேறியது.

Brian Lara
Brian Lara

இப்போது இங்கிலாந்தில் நடை பெற்று வரும் அந்த அணியுடனான டெஸ்ட் போட்டி தொடரின் பங்கேற்று வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரின் பர்மின்ஹோம் மைதானத்தில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ஜோ ரூட் ஆடி வருகிறார். நூற்றி முப்பத்தி ஓரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள லாரா பதினோறாயிரத்து தொல்லாயிரத்து ஐம்பத்தி மூன்று ரன்களை எடுத்துள்ளார். இவரின் இந்த சாதனையை ஜோ ரூட் இன்று முறியடித்துள்ளார்.

சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்துள்ள ஏழாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங், ஜேக் காலீஸ், இந்திய அணியின் நட்சத்திர வீரரான ராகுல் டிராவிட், இங்கிலாந்து அணியைச் சார்ந்த அலிஸ்டர் குக் ஆகியோர் முறையே முதல் ஐந்து இடத்தை பிடித்துள்ளனர்

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here