Cricket
இங்கிலாந்தின் நம்பர் ஒன் ப்ளேயர் இனி ரூட் தான்!…சச்சின் சாதனையையும் சமன் செய்தார்…
இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த இரு அணிகளுக்குமிடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் துவங்கியுள்ளது. முதலாவது போட்டி முல்தானில் நடந்து வருகிறது.
டாஸில் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.
தனது முதலாவது இன்னிங்ஸில் ஐனூற்றி ஐம்பத்தி ஆறு ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் சாஃபீக் நூற்றி இரண்டு ரன்களை விளாசினார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் நூற்றி ஐம்பத்தி ஓரு ரன்களை குவித்திருந்தார். அதே போலே சல்மான் நூற்றி பத்தொன்பது பந்துகளில் நூற்றி நாலு ரன்களை குவித்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடத்துவங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சினை நாலாப்பக்கமும் சிதற அடித்தனர். என்னூற்றி இருபத்தி மூன்று ரன்களை ஏழு விக்கெட்டுகளை இழந்து எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சி டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து அணியின் ஹேரி புரூக் ஒரு நாள் போட்டியில் விளையாடுவதைப் போல விளையாடி முன்னூற்றி இருபத்தி இரண்டு பந்துகளை எதிர்கொண்டு முன்னூற்றி பதினேழு ரன்களை குவித்தார். அதே போல அந்த அணியின் அனுபவமிக்க வீரரான ஜோரூட் முன்னூற்றி எழுபத்தி ஐந்து பந்துகளை எதிர்கொண்டு இரு நூற்றி அறுபத்தி இரண்டு ரன்களை குவித்தார்.
இந்த இரட்டை சதத்தின் மூலம் ரூட் டெஸ்ட் போட்டிகளில் இருபதாயிரம் ரன் களை கடந்துள்ளார். அதோடு டெஸ்ட் போட்டிகளில் இருபதாயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் இதற்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளில் ஆறு இரட்டை சதங்களை விளாசியிருந்தார். இந்த போட்டியில் தனது ஆறாவது இரட்டை சதத்தை அடித்ததன் மூலம் சச்சின் சாதனையை சமன் செய்தார் ரூட்.
இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்ததை அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத்துவங்கிய பாகிஸ்தான் அணி ஐம்பத்தி ஒன்பது ரன்களை குவிப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை மலமலவென இழந்தது தடுமாறி வருகிறது ஆட்டத்தின் நான் காம் நாளான இன்று தனது இரண்டாவாது இன்னிங்ஸில் பத்தொன்பது ஓவர்கள் நிறைவு பெற்ற சூழலில் தட்டுதடுமாறி வருகிறது. இங்கிலாந்து அணியை விட இருனூற்றி எட்டு ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் பாகிஸ்தான் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இன்னும் ஒரு நாள் ஆட்டம் மீதமிருக்கின்ற நிலையில், இங்கிலாந்து அணிக்கு அதன் இரண்டாவது இன்னிங்சும் மீதமுள்ளது. இங்கிலாந்து அணியின் அட்கின்ஸன், கர்சே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.