Connect with us

latest news

கள்ளச்சாரய பலி… அதிரடி ஆபரேஷன் – 876 பேரை வளைத்த போலீஸ்

Published

on

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 55-க்கும் மேற்பட்டோர் பலியானதை அடுத்து போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் கடந்த 3 நாட்களில் மட்டும் வடக்கு மண்டலத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் 876 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் பலியான விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக அரசு மற்றும் போலீஸாரின் அலட்சியப் போக்கே இந்த மரணங்களுக்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் தொடங்கி திமுகவின் தோழமைக் கட்சிகள் வரை கண்டனம் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் அரசு இரும்புக் கரம் கண்டு கள்ளச்சாராய விற்பனையை ஒடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதையடுத்து, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வடக்கு மண்டல மாவட்டங்களில் போலீஸார் கள்ளச்சாராய ஒழிப்பு அதிரடி வேட்டையைத் தொடங்கினர்.

போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் வடக்கு மாவட்டங்களில் மட்டும் கடந்த 3 நாட்களில் 876 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, இதுதொடர்பாக 841 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், 4,700 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் போலீஸார் கைது செய்து அழித்துள்ளனர். போலீஸாரின் இந்த கள்ளச்சாராய வேட்டை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரியரை க்ளியர் பண்ணு… கண்டித்த அம்மா…தம்பியை கொலை செய்த மகன்…

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *