india
கார்கில் வெற்றி தின இருபத்தி ஐந்தாவது வருடம்…ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி…பாகிஸ்தானுக்கு மோடி எச்சரிக்கை…
கடந்த 1999ம் ஆண்டு இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக காஷ்மீர் மாநிலம் கார்கிலில் தனது ஊடுருவலை துவங்கியது பாகிஸ்தான். அதன் பின்னர் அந்த பகுதியை ஆக்கிரமித்தது. அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் இந்தியாவிற்குள் புகுந்த பாகிஸ்தான் படையை ஆபரேஷன் விஜய்யை துவங்கி விரட்டி அடித்தார்.
1999ம் ஆண்டு மே மாதம் இருபத்தி ஆறாம் தேதி துவங்கியது இரண்டு நாடுகளுக்கும் இடையேயான சண்டை. போரின் இறுதியில் பின்னங்கால் பிடரி அடிக்க, புற முதுகை காட்டி இந்திய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு முன்னால் ஈடு கொடுக்க முடியாமல் மண்டியிட்டு தோற்று ஓடியது பாகிஸ்தானிய ராணுவப்படை.
எட்டுத் திக்கும் வெற்றி முரசின் ஒலி இந்தியா முழுவதும் ஒலிக்க ஜூலை இருபத்தி ஆறாம் தேதி கார்கிலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. வெற்றிக் கர்வத்துடன் பட்டொளி வீசி பறந்தது மூவர்ணக் கொடி. போர் முடிவுக்கு வந்த தினமான ஜூலை 26ம் தேதி ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த போரில் ஐனூற்றி இருபத்தி நாலு இந்திய ராணுவ வீரர்கள் தாய்திரு நாட்டிற்காக தங்களது இன்னுயிரை நீத்தனர்.
கார்கில் போரில் இந்திய வெற்றி பெற்ற இருபத்தி ஐந்தாவது ஆண்டு இன்று. இதற்கான வெற்றி தின வழாக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு தனது அஞ்சலியை செலுத்திய பின்னர் பேசிய மோடி, இந்தியா மீது மறைமுகமாக இன்றும் பாகிஸ்தான் போரை தொடர்கிறது.
தீய நோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி ஒடுக்கப்படுவார்கள். கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை, பயங்கரவாதிகளை பின்னால் இருந்து தூண்டி வருகிறது. பாகிஸ்தானால் இந்தியாவை ஒரு போது வீழ்த்த முடியாது. பயங்கரவாதம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்தார்.