Connect with us

Cricket

எம்.எஸ்.தோனியை ஏலத்தில் எடுக்க ஸ்கெட்ச் போடும் காவ்யா மாறன்… விட்டதை பிடிக்க பிளானா?

Published

on

மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் ஐபிஎல் உரிமையாளர்களின் கூட்டம் நேற்று நடந்தது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், டெல்லியில் இருந்து கிரண் குமார், லக்னோவின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா, சிஎஸ்கேவின் உரிமையாளர் ரூபா குருநாத், ராஜஸ்தானின் உரிமையாளரான மனோஜ், ஆர்சிபி உரிமையாளரான ப்ரத்மேஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் நேரில் கலந்துக்கொண்டனர்.

கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக்கான், மும்பை அணியின் உரிமையாளரான முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் வீடியோ கால் மூலம் கலந்து கொண்டனர். மெகா ஏலம் நடக்க இருப்பதால் விவாதம் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே உரிமையாளர்கள் மெகா இடம் நடத்த வேண்டாம் என கூறியதை அடுத்து ஆலோசனை பரபரப்பானது.

இது மட்டுமல்லாமல், தோனி தன்னை பெரிய அளவில் தக்கவைக்க வேண்டாம் என்று  சென்னை அணி நிர்வாகத்திடம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரை ஐந்து கோடிக்கும் கீழ் தக்க வைத்தால் சென்னை அணி மீதமிருக்கும் தொகையை மற்ற வீரர்களை எடுக்க ஏலத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்கு தோனி இதை அறிவுறுத்தினாராம்.

இதனால் சென்னை அணி நிர்வாகம், சர்வதேச வீரர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களை அன் கேப்டு வீரராக கருத வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. இதனால் தோனியை குறைந்த விலைக்கு தக்க வைக்க முடியும் என சென்னை அணி திட்டம் தீட்டியது. ஏனெனில் கடந்த முறை தோணி 12 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு எதிராக பேசிய காவ்யா மாறன், அனுபவம் மிக்க வீரர்கள் அணிக்கு பிராண்ட் வேல்யூவை கொண்டு வருகிறார்கள். அவர்களை அன் கேப்டு வீரர்களாக கருதினால் அது அவமரியாதையாக இருக்கும். சர்வதேச அளவில் ஓய்வு பெற்றிருந்தாலும் சில முக்கிய வீரர்கள் ஏலத்தில் பெரிய தொகைக்கு செல்வார்கள். இதனால் அவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஊதியத்தையும் மெகா ஏலமே தீர்மானிக்கும் எனக் கூறி இருக்கிறார். இதனால் தோனியை ஏலத்தில் எடுப்பதே காவ்யா மாறனின் திட்டமோ எனக் கலாய்த்து வருகின்றனர்.

google news