india
‘கூகுள் மேப்’ பொய் சொல்லாதுடா..! காரோடு ஆற்றுக்குள் பாய்ந்த இளைஞர்கள்.. நூலிலையில் எஸ்கேப்..!
கேரள மாநிலத்தில் கூகுள் மேப் உதவியுடன் காரில் சென்ற இளைஞர்கள் ஆற்றல் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
google மேப் என்பது ஒரு புவியியல் தகவல் தொழில்நுட்பம் மென்பொருள். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இரு சக்கரங்களிலோ அல்லது நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஒரு ஆப். செல்ல வேண்டிய இடத்திற்கு சாலை உள்ளிட்ட அனைத்தையும் கூகுள் மேப் காட்டி விடுவதால் நமக்கு தெரியாத இடத்திற்கு கூட எளிதில் நம்மால் சென்று விட முடியும்.
இருப்பினும் ஒரு சில சமயங்களில் கூகுள் மேப் தவறான வழியை காட்டி விடுகின்றது. இதனால் மிகப்பெரிய விபத்தும் சிக்கலும் ஏற்படுகின்றது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறி இருக்கின்றது. அதாவது கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு என்ற பகுதியை சேர்ந்த அப்துல் ரஷீத் மற்றும் தஷ்ரீப் இருவரும் கர்நாடக மாநிலம் ஒப்பினங்கில் என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு காரில் சென்று இருக்கிறார்கள்.
அவர்கள் google map உதவியுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது குட்டிகோல் பல்லாஞ்சி என்ற ஆற்றின் பாலம் வழியாக அவர்கள் சென்றார்கள். google மேப் புதியதாக கட்டப்பட்டிருந்த பாலத்தை காட்டாமல் ஏற்கனவே இருந்த பழைய பாலத்தை காட்டியுள்ளது. அதை பின்பற்றி இருவரும் காரில் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்ற பாலத்தில் தடுப்புகள் இல்லாதது இருட்டில் தெரியவில்லை.
இதனால் அவர்களது கார் திடீரென்று ஆற்றுக் கொள் பாய்ந்து விட்டது. அவர்களது கார் சுமார் 150 மீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சிறிது தூரம் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து செடிகளில் கார் மாட்டி நின்றுவிட்டது. இதனால் இருவரும் காரின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக வெளியே வந்து விட்டார்கள்.
உடனே தங்களது உறவினருக்கு போன் செய்து தகவலை தெரிவித்த பிறகு அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளத்தில் மாட்டி இருந்த அப்துல் ரஷீத் மற்றும் தஷீத் ஆகிய இருவரையும் மீட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் ஆற்றின் நடுவே சிக்கிய காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் தப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.